[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏப்ரல்.4ஆம் தேதி நெடுவாசல் மக்களை சந்திக்க மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் முடிவு
  • BREAKING-NEWS இவ்வளவு நாட்களாக சத்ரியனாக பார்த்த என்னை இனி சாணக்கியனாக பார்க்க போகிறீர்கள்- டி. ராஜேந்தர்
  • BREAKING-NEWS அரிதாரம் பூசிய வண்ண பலூன்கள் பார்க்க நன்றாகத்தான் இருக்கும்- துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
  • BREAKING-NEWS நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கிய கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழா நிறைவு
  • BREAKING-NEWS சென்னை போர் நினைவுச் சின்னத்தில் உள்ள தேசியக் கொடி சேதமடைந்துள்ளது
  • BREAKING-NEWS கச்சதீவு புனித அந்தோணியார் கோயிலின் 2 ஆம் நாள் திருவிழா சிறப்பு திருப்பலியுடன் தொடங்கியது
  • BREAKING-NEWS மத்திய பிரதேசம்: மங்காலி, கொலாரஸ் பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது

இலங்கை டெஸ்ட்… முரளி விஜய்க்கு பதிலாக இந்திய அணியில் தவான் சேர்ப்பு

dhawan-to-replace-injured-vijay-for-sri-lanka

இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் காயம் காரணமாக தமிழக வீரர் முரளி விஜய் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக ஷிகர் தவான் அணியில் இடம்பெறுவார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தெரிவித்துள்ளது. 

ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரின் போது இந்திய தொடக்க ஆட்டக்காரரான முரளி விஜய்க்கு கையில் காயம் ஏற்பட்டது. அந்த தொடருக்குப் பின்னர் ஓய்வில் இருந்து வரும் முரளி விஜய், ஜூலை 26ல் தொடங்கும் இலங்கை அணிக்கெதிரான தொடரில் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், முரளி விஜய்க்கு காயம் முழுமையாகக் குணமாகாததால் அவருக்கு பதிலாக ஷிகர் தவான் அணியில் இடம்பெறுவார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. அவர் மேலும் சில காலம் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர் குழு அறிவுறுத்தியால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதன்மூலம், கடந்த அக்டோபர் 2016க்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணியில் ஷிகர் தவான் தற்போது மீண்டும் இடம் பெற்றுள்ளார். இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close