சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணியை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியது. கார்டிஃப் நகரில் நடந்த போட்டியில் 311 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடிய நியூசிலாந்து அணி 44.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 223 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் அதிகபட்சமாக 87 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணியின் பிளெங்கெட் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 310 ரன்கள் எடுத்தது. அந்த அணியைச் சேர்ந்த அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோஸ் பட்லர், ஜோ ரூட் ஆகியோர் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தனர். நியூசிலாந்து தரப்பில் ஆடம் மில்னே, கோரே ஆண்டர்சன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். தொடர்ந்து 2 போட்டிகளில் வெற்றி பெற்றதால், இங்கிலாந்து அணி அரையிறுதியை உறுதி செய்தது.
ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்..! - தர்மஅடி கொடுத்த மக்கள்
குளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்
கலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..!
ட்விட்டரில் யார் டாப் ? - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்
இது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..?’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்
இது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..?’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்
கலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..!
“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..!
“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்