[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது

மொபைல் நிறுவனத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் முறையிட்ட தோனி

ms-dhoni-alleges-misuse-of-name-by-mobile-company

ஒப்பந்த காலம் முடிந்த பின்னரும் மேக்ஸ் மொபைல் நிறுவனம் தனது பெயரை சட்டவிரோதமாகத் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாக கிரிக்கெட் வீரர் தோனி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.

மேக்ஸ் மொபிளிக் என்ற நிறுவனம் கடந்த 2012 ஆம் ஆண்டு தனது நிறுவனத்தின் விளம்பர தூதரக இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனியை ஒப்பந்தம் செய்தது. ஓராண்டு செல்லுபடியான இந்த ஒப்பந்தம் கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்தது. அதன் பின்னரும் தனது பெயரை அந்நிறுவனம் பயன்படுத்துவதாக டெல்லி நீதிமன்றத்தில் தோனியின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்த வழக்கில் கடந்த 2014 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், தோனியின் ஒப்பந்தம் டிசம்பர் 2012 ல் காலாவதியானதால், மேக்ஸ் நிறுவனம் தனது இணையதளம் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இருந்தும் தோனியின் பெயர் மற்றும் புகைப்படத்தை நீக்கவேண்டும் என்று உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவை மேக்ஸ் நிறுவனம் அமல்படுத்தவில்லை என்று கூறி அதன் தயாரிப்புகளை உடனடியாக பறிமுதல் செய்ய வேண்டும் என்று தோனி தரப்பில், அவரது வழக்கறிஞர் சஞ்சீவ் மனுத் தாக்கல் செய்துள்ளார்.  

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close