[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

எச்சிலால் பந்தை மெருகேற்றினாரா விராட் கோலி?..என்ன சொல்கிறது ஐ.சி.சி ..?!

why-ball-tampering-allegations-against-virat-kohli-hold-no-basis

ராஜ்கோட்டில் நடைபெற்ற இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட் போட்டியின் போது விராட் கோலி எச்சிலை கொண்டு பந்தை மெருகேற்றியதாக புகார் எழுந்தது. அதையடுத்து விராட் கோலி மீது விசாரணை நடத்த வேண்டும் என்று எழுந்த கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் வாரியம் நிராகரித்துள்ளது.

ஆஸ்திரேலிய‌வுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது தென்னாப்பிரிக்க அணிக் கேப்டன் டூ பிளஸ்ஸி பந்தை சேதப்படுத்திய பிரச்னை விஸ்வரூம் எடுத்ததை தொடர்ந்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகிகள் டூ பிளஸ்ஸியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் வாயில் ஜெல்லியை மென்று, அதனை எச்சிலுடன் கலந்து தடவி பந்தின் தன்மையை மாற்றியதை டூ பிளஸ்ஸி ஒப்புக்கொண்டார். இதனையடுத்து போட்டிக்கட்டணம் முழுவதையும் அபராதமாக செலுத்த அவருக்கு உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், ராஜ்கோட்டில் நடைபெற்ற இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட் போட்டியின் போது விராட் கோலி எச்சிலை கொண்டு பந்தை மெருகேற்றினார் என்று புகார் எழுந்தது. தென்னாப்ரிக்க அணிக் கேப்டன் டூ பிளஸ்ஸி செய்த தவறையே விராட் கோலியும் செய்தார் என்றும் கூறப்பட்டது. எனவே விராட் கோலியிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் வாரியம் தற்போது நிராகரித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close