[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

ராஜ்கோட் டெஸ்ட்..இங்கிலாந்து அணி 537 ரன்கள் குவிப்பு

gambhir-vijay-solid-ind-face-uphill-task

இங்கிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் குவித்துள்ளது.

முன்னதாக இங்கிலாந்து அணி, தனது மு‌தல் இன்னிங்ஸில் 537 ரன்கள் குவித்தது. 4 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் என்ற முதல் நாள் ஸ்கோருடன் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸை இன்று தொடர்ந்து விளையாடியது. 99 ரன்களுடன் ஆட்டத்தை தொடர்ந்த மொயின் அலி, டெஸ்ட் போட்டிகளில் நான்காவது சதத்தை பூர்த்தி செய்தார். 117 ரன்களில் அவர் வெளியேறினார். மற்றொரு முனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் ஸ்டோக்ஸும் சதமடித்தார். 128 ரன்கள் விளாசி ஸ்டோக்ஸ் ஆட்டமிழந்தார். பையர்ஸ்டோவ் 46 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி 537 ரன்களில் ஆட்டமிழந்தது. ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், அஷ்வின், உமேஷ் யாதவ், முஹமது ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். பின்னர் முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி இரண்டாம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்துள்ளது. கவுதம் கம்பீர் 28 ரன்களுடனும், முரளி விஜய் 25 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close