[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS என்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை

’இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் பொற்காலம்’: விராத் கோலி தலைமையில் சாதிக்குமா இளம் அணி?

tean-india-under-v-kohli

விராத் கோலி தலைமையிலான தற்போதைய இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி இளம் வீரர்களை உள்ளடக்கியதாக இருப்பதால், கிரிக்கெட் உலகில் நீண்ட காலம் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சொந்தமண்ணில் முன்னெப்போதும் இல்லாதவகையில் நடப்பு 2016-17 சீசனில் நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிராக இந்திய அணி 13 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் விராத் கோலி தலைமையிலான இந்திய அணி, டெஸ்ட் கிரிக்கெட்டில் அடுத்த பத்தாண்டுகளுக்கு மேல் ஆதிக்கம் செலுத்தும் சென்று கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

டெஸ்ட் வரலாற்றில் புதிய மைல்கல்லாக அணியின் 500ஆவது டெஸ்ட் போட்டி மற்றும் சொந்தமண்ணில் 250ஆவது டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு விராட் கோலி தலைமையில் வெற்றி முகமே. குறிப்பாக டி20 போட்டிகள் அறிமுகமான பின்னர் டெஸ்ட் போட்டிகளுக்கான வரவேற்பு குறைந்துவருவதாகக் கருதப்படும் நிலையில், கான்பூர் மற்றும் கொல்கத்தா டெஸ்ட் போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்புக் கிடைத்தது. கிரிக்கெட் மைதானங்களில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் விராத் கோலியின் பண்பும், ஒவ்வொரு போட்டியையும் வெல்ல வேண்டும் என்ற தாகமும் இதற்கு முக்கியமான காரணங்களாகக் கருதப்படுகிறது.

கிரிக்கெட் போட்டிகளை அதிக அளவில் நடத்த விரும்புவதாக இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ள நிலையில், அந்த சவால்களை எதிர்க்கொள்ள இளம் இந்திய அணி தயாராகவே இருக்கிறது எனலாம். அண்ணிய மண்ணில் இந்திய அணியின் டெஸ்ட் சாதனைகள் குறைவே. அதிலும், குறிப்பாக பந்துகள் எகிறும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க ஆடுகளங்களில் இந்திய அணியின் சாதனைகள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்றே கூறலாம். விராத் கோலி தலைமையிலான தற்போதைய இந்திய அணியால் இந்த குறையும் நீங்கும் என்று நம்பலாம்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 1970-80-களில் ஆதிக்கம் செலுத்திய மேற்கிந்தியத் தீவுகள் அணி மற்றும் 1990-2000 காலகட்டங்களில் ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலிய அணி ஆகிய அணிகளுடன் தற்போதைய இந்திய டெஸ்ட் அணியை விமர்சகர்கள் ஒப்பிட்டுப் பேசத் தொடங்கியிருக்கின்றனர். அடுத்த பத்தாண்டுகள் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பொற்காலமாக இருக்கும் என்பதே கிரிக்கெட் விமர்சகர்கள் பலரின் கருத்தாகவும் இருக்கிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close