[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS அஜித் சிறந்த நடிகர், அரசியல் குறித்த அவரது கருத்துக்கு நன்றி; அரசியலில் ஈடுபட மாட்டேன் என அஜித் முடிவு எடுத்திருப்பது நல்ல முடிவு - கனிமொழி எம்.பி.
  • BREAKING-NEWS நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை - நடிகர் அஜித்குமார்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி; யார் பிரதமராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்
  • BREAKING-NEWS மதுரையில் பேட்ட, விஸ்வாசம் திரையிடப்பட்டதில் ஜனவரி 10-17 வரையிலான வசூல் விவரங்களை அளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு
  • BREAKING-NEWS ஸ்டாலினுக்கு துணிவு இருந்தால் கொல்கத்தா மேடையில் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS வளர்ச்சி நிதி, புயல் நிவாரண நிதியை கேட்டும் தராத மத்திய அரசுடன் இணக்கம் என எப்படி கூற முடியும்? - தம்பிதுரை எம்.பி.

தொடர்ந்து கதை திருட்டில் குறி வைக்கப்படுகிறாரா ஏ.ஆர்.முருகதாஸ்?

vijay-starrer-sarkar-a-stolen-story-case-filed-against-director-ar-murugadoss-for-plagiarism

‘சர்கார்’ கதை திருட்டு விவகாரம் நீதி மன்றம் வரை சென்றுள்ளது. இந்தத் தருணத்தில் ஏற்கெனவே ‘கத்தி’ கதை திருட்டு புகாரில் என்ன நடந்தது? இந்த ‘சர்கார்’ புகாரில் என்ன நடந்துள்ளது? என்பதை பார்க்கலாம். 

ஆம்! மறுபடியும் கதை திருட்டு புகாரில் சிக்கி இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். ஏற்கெனவே மீஞ்சூர் கோபி என்பவர் முருகதாஸ் மீது ஒரு குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். ‘கத்தி’ கதை என்னுடையது என அவர் சொன்ன அடுத்த நொடி வைரலானது. இந்த விவகாரம் ஃபேஸ்புக், ட்விட்டர் என்று கோபிக்கு ஆதரவாக பெரிய பிரச்சாரம் சென்றது. குறிப்பாக மீஞ்சூர் கோபிக்கு யுடியூப் சானல்கள் அதிகமாக ஆதரவு கொடுத்தன. 

இந்தக் குற்றச்சாட்டு, வார்த்தை சண்டையாக ஆரம்பித்து பிறகு வழக்கு வரை சென்றது. இறுதியில் அனல் பறக்கும் வழக்காக வரும் என எதிர்பார்த்த வேளையில் வழக்கை வாபஸ் பெற்றார் கோபி. அடுத்த நிமிடமே கோபியை வறுத்து எடுத்தனர் அதுவரை ஆதரவு அளித்து வந்த நெட்டீசன்கள். வழக்கு வாபஸ் ஆன பின் மீஞ்சூர் கோபி, கோபி நயினார் ஆனார். நயன்தாராவை வைத்து ‘அறம்’ எடுத்தார். ஒரே நாளில் புகழின் உச்சத்திற்கு சென்றார். அந்தப் படம் நயன் சினிமா வாழ்க்கையில் ப்ளாக்பாஸ்டர் ஹிட் அடித்தது.

இதே கோபிதான் பா.ரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’ கதை என்னுடையது என சர்ச்சை கிளப்பினார். அந்தச் சர்ச்சையும் அனல் பறக்க அதுவும் அப்படியே அடங்கிப்போனது. முருகதாஸின் ‘கத்தி’ கதைக்கு தஞ்சை இளங்காடு கிராமத்தைச் சேர்ந்த அன்பு மற்றும் ராஜசேகரும் நீதிமன்றத்திற்கு சென்றார்கள். அவர்கள் எடுத்த ‘தாகபூமி’ கதையைதான் முருகதாஸ் திருடிவிட்டதாக அவர்கள் தரப்பு வாதத்தை நீதிமன்றத்தில் முன் வைத்து முறையிடப்பட்டது.  தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இதனை விசாரித்த நீதிபதி முகமதுஅலி, படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸையும், நடிகர் விஜய்யையும் நேரில் ஆஜராக உத்தரவிட்டார். அதன் பிறகு அந்தப் பிரச்னையும் அடங்கிபோனது. 

விஜய்யின் ‘கத்தி’யை பொருத்தவரை முருகதாஸுக்கு ஏகப்பட்ட பிரச்னை இலங்கை ராஜபக்ஷேவை முன் வைத்து அது தமிழர்கள் v/s சிங்களர்கள் பிரச்னையாக கூர் தீட்டப்பட்டது. கடைசி வரை அமைதியாக இருந்த முருகதாஸ் படம் வெளியான பிறகு ஒரு பேட்டியை கொடுத்தார். அதில் ‘நான் மட்டும் என்ன நிலாவில் இருந்தா குதித்து வந்திருக்கிறேன். எனக்குப் பின்னாலும் ஒரு ஜாதி இருக்கிறது. அவர்கள் வர மாட்டார்களா? ஒரு கிரியேட்டராக வேலை செய்ய விடுங்கள். தமிழில் படம் பண்ணுவதற்கே வெறுப்பாக உள்ளது. பேசாமல் வேறு மொழிக்கு போய் படம் பண்ணலாமா என யோசிக்க தோன்றுகிறது” என்று வருத்தம் தோய்ந்த குரலில் பேசியிருந்தார். 

அப்போதும் அவர் ‘கத்தி’ கதை திருட்டு பற்றி விரிவாக பேசவில்லை. அந்தப் பிரச்னை உச்சத்தில் இருந்தபோது ‘கோபி என்பவரை நான் சந்தித்ததே இல்லை’ என மறுத்திருந்தார். ஆனால் கடந்த ஒரு வருடங்களில் முருகதாஸை மூன்று முறை நேரில் சந்தித்து நான் கதையை கூறியிருக்கிறேன். என் ‘மூத்தக்குடி’ கதையை கேகே நகர் சிவன் பார்க்கில் வைத்து அதிகாலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை கதையை சொன்னேன். குறைந்தது 10 முறையாவது கதையாக்கம் குறித்து முருகதாஸிடம் போனில் பேசி இருப்பேன்.” என்று மீஞ்சூர் கோபி விளக்கி இருந்தார். அத்தோடு ஜெகன் மூலமாகதான் என் கதை முருகதாஸ் கைக்கு போனது என்றும் விவரம் தந்திருந்தார். ஆனால் அந்தக் கதை திருட்டு பற்றி நடிகர் விஜய் இன்று வரை எந்தக் கருத்தையும் சொன்னதில்லை.

ஆனால் இந்த முறை முருகதாஸின் ‘சர்கார்’ கதை திருட்டை முன் வைத்திருப்பவர் இப்பிரச்னையில் விஜய்யையும் சம்பந்தப்படுத்தி இருக்கிறார். குமுதம் இதழுக்கு அவர் தந்திருக்கும் பேட்டியில் முதலில் விஜய்யை சந்தித்துக் கூறிய கதைதான் ‘செங்கோல்’. ஆனால் அரசியல் கதையில் நான் நடிக்கும் எண்ணத்தில் இல்லை என மறுத்துள்ளார் விஜய். இப்படிதான் நீளுகிறது ‘சர்கார்’ கதை திருட்டு.  மேலும் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் இவரது கதையை 2007லேயே அவர் பதிவு செய்து வைத்துள்ளதாகவும் குற்றச்சாட்டை முன் வைத்திருக்கும் வருண் கூறியுள்ளார். இந்தக் கதை விஜய் என்ற போட்டோகிராஃபர் மூலமாக முருகதாஸுக்கு சென்றதாக அவர் கூறியுள்ளார். இவர் கதையையும் முருகதாஸ் கதையையும் ஒப்பிட்டு பார்த்த சங்க தலைவர் பாக்யராஜ் இரண்டு கதைகளுமே ஒன்றுதான் என ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருப்பதாக வருண் கூறியுள்ளார்.

இப்போது பிரச்னை அவரச வழக்காக நீதிமன்றம் வரை சென்றுள்ளது. உண்மையில் முருகதாஸ் இந்தக் கதை பிரச்னை குறித்து அங்கே வந்து தனது தரப்பை விளக்குவார் என பலரும் எதிர்பார்த்து வருகிறார்கள். காரணம் இந்தக் கதை திருட்டு புகார் தமிழ் சினிமாவில் அவரை குறி வைத்து சுழன்று வருகிறது. ஆகவே அவர் பப்ளிசிட்டிக்காக குறி வைக்கப்படுகிறாரா? இல்லை இந்தப் பிரச்னையில் ஏதேனும் உண்மையுள்ளதா என பலரும் யோசிக்க தொடங்கியுள்ளனர். அவர்தான் இந்தப் பிரச்னைக்கு முடிவு கட்ட வேண்டும். இந்தக் கதையை வருண் சொன்னதைபோல ஏற்கெனவே நடிகர் விஜய் கதை கேட்டது உண்மையானால் அவரும் இந்தப் பிரச்னை குறித்து விளக்கம் அளிப்பார் என எதிர்பார்த்து பலரும் காத்திருப்பதாக கூறப்படுகிறது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close