[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்
  • BREAKING-NEWS 18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS பாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS கேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு
  • BREAKING-NEWS டெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது
  • BREAKING-NEWS வெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு
  • BREAKING-NEWS கொச்சி விமான நிலையம் மூடல்

2018ல் இன்னும் லாப கணக்கை தொடங்காத தமிழ் சினிமா...!

tamil-cinema-still-not-get-profit-in-2018

தமிழ் சினிமாவில் ஆண்டுக்கு 200 திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். இதில் குறைந்த பட்ஜெட் பங்களும் அடங்கும். இதன் மூலம் வருடத்திற்கு  இரண்டாயிரம் கோடிக்கு மேல் வியாபாரம் நடைபெறுகிறது. ஆனால் லாபம் தரும் திரைப்படங்களின் எண்ணிக்கை குறைந்துக் கொண்டே செல்கின்றன. அதுவும் கடந்த ஆண்டில் வெளியான திரைப்படங்களில் 95 சதவீதப்படங்கள் தோல்வியடைந்துள்ளன. இதனால் அந்தப் படங்களின் தயாரிப்பாளர்கள் கடுமையான நஷ்டத்தை சந்தித்து சினிமா துறையைவிட்டு வெளியேறும் முடிவை எடுத்துள்ளார்கள்.

ஒரு கட்டத்தில் அதிக லாபம் தரும் படங்கள் வெளியாகி கொண்டிருந்தன. ஆனால் தற்போது அந்தச் சூழல் மிகவும் மாறிவிட்டது என்று கூறுகின்றனர் தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள். அதேபோல் இதற்கு சரியான திட்டமிடுதல் இல்லாமல் அதிக செலவு செய்வது, முழு கதையையும் கேட்காமல் திரைப்படங்களை எடுப்பது, இயக்குனர், நடிகர்களின் மார்க்கெட்டை மட்டும் நம்புவது போன்றவை தோல்விக்கு முக்கிய காரணமாக அமைகிறது என்று சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர்.

முன்பு 75 சதவீத ரசிகர்கள் திரையரங்கிற்கு வந்து திரைப்படங்களை பார்த்தனர். ஆனா இன்று அந்த எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது என்று திரையரங்க உரிமையாளர்கள் கூறுகின்றனர். மேலும்  ரஜினி, அஜித், விஜய், சிவகார்த்திகேயன் ஆகிய நான்கு பேரின் படங்களுக்கு மட்டுமே ஓப்பனிங் உள்ளதாக தெரிவிக்கின்றனர். இவர்களின் படங்களின் பட்ஜெட்டும் அதிகமாக உள்ளதால் குறைந்தது பத்து நாட்களாவது ரசிகர்களின் ஆதரவோடு திரைப்படம் ஓட வேண்டியது அவசியமாக உள்ளது.

இந்த நிலை தொடர்ந்தால் நிச்சயம் சினிமா தொழில் விரைவில் பெரும் இழப்பை சந்திக்கும் என கருத்து நிலவுகிறது. இந்த ஆண்டு தொடங்கி ஒரு மாதம் முடிவடைந்து விட்டது. ஆனால் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்களுக்கு லாபம் தரும் படமாக எதுவும் அமையவில்லை. பொங்கல், குடியரசு தினம் என இரண்டு நீண்ட விடுமுறை கொண்ட நாளில் வெளியான படங்களும் விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் நஷ்டத்தைதான் ஏற்படுத்தியுள்ளன. இதனால் விநியோகஸ்தர்கள் கடுமையான மன உளைச்சலில் உள்ளனர். இந்த நிலை மாற தயாரிப்பாளர்கள் சிறந்த கதைகளை தேர்வு செய்வது மிகவும் அவசியமாக உள்ளது என்று சினிமா விரும்பிகள் கருதுகின்றனர். முதல் மாதம் ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் வரும் மாதங்களில் படங்கள் எப்படி அமையும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close