[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

’கழிப்பறைகளும், வேலைவாய்ப்புகளும்’... உலக கழிப்பறை தின சிறப்புப் பகிர்வு

today-world-toilet-day

உலகம் முழுவதும் கழிப்பறை வசதி இல்லாத 2.4 பில்லியன் மக்களுக்கு அந்த வசதியை ஏற்படுத்தித் தரும் நோக்கில் ஆண்டுதோறும் நவம்பர் 19-ல் உலக கழிப்பறை தினம் அனுசரிக்கப்படுகிறது.

இந்தியாவில் சுமார் 53 சதவிகித வீடுகள் கழிப்பிட வசதியின்றி இருப்பதாக ஐ.நா. ஆய்வில் கூறப்பட்டுள்ளது. சுமார் 80 கோடி கிராம மக்கள் திறந்த வெளியை தான் கழிப்பறையாக பயன்படுத்துகிறார்கள் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. யுனிசெப் அறிக்கையின்படி, உலகளவில் சுகாதாரமற்ற கழிப்பறைகளை பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. சுத்தம் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கில், ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் 2.7 கோடி கழிப்பறைகள் நாடுமுழுவதும் கட்டப்பட்டுள்ளது. 2019-ஆம் ஆண்டுக்குள் திறந்த வெளியில் மலம் கழிக்காத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாக உள்ளது. சுகாதாரமற்ற கழிப்பறைகளைப் பயன்படுத்துவாதல் மட்டுமே உலகம் முழுவதும் ஆண்டுக்கு 3,15,000 குழந்தைகள் உயிரிழப்பதாக யுனிசெப் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கழிப்பறைகளைப் பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கடந்த 2001ம் ஆண்டு முதல் உலக கழிப்பறை தினம் நவம்பர் 19ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் கழிப்பறைகளும், வேலைவாய்ப்புகளும் என்ற கருத்தை முன்வைத்து இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. சுகாதாரமற்ற கழிப்பறைகளால் ஏற்படும் உடல்நலக்குறைவால் பல்வேறு நாடுகளில் ஆண்டுதோறும் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதம் அளவுக்கு பாதிக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close