[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS தமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பற்றாக்குறையை போக்க செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதியை உடனடியாக ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS சிறப்பு விலக்கு மூலம் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் - பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி மனு
  • BREAKING-NEWS மருத்துவர்கள், மருத்துவ துறையை சேர்ந்தவர்களை பாதுகாக்க சட்டப்பேரவையில் தனியாக சட்டம் இயற்றுக - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம்
  • BREAKING-NEWS அனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்; சவாலாக உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது - அமைச்சர் உதயகுமார்
  • BREAKING-NEWS பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் டெல்லியில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சந்திப்பு

3 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகமான பேஸ்புக் போலி கணக்குகள்!

duplicate-facebook-accounts-tripled-in-three-years

கடந்த மூன்று ஆண்டுகளில் பேஸ்புக் போலி கணக்குகள் 3 மடங்கு அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
உலகம் முழுவதும் சுமார் 200 கோடிக்கும் அதிகமானவர்கள் பயன்படுத்தும் சமூக வலைதளம் பேஸ்புக். இந்நிலையில் பேஸ்புக்கில் உள்ள போலி கணக்குகள் குறித்து அந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. அதில் கடந்த மூன்று ஆண்டுகளில் போலி கணக்குகள் 25 கோடியாக அதிகரித்துள்ளதாகவும், இது 3 மடங்கு அதிகம் என தெரிவித்துள்ளது. 

பேஸ்புக்கை பயன்படுத்துபவர்களின் விவரங்களை மாத அடிப்படையில் கணக்கிட்டபோது தெரிய வந்துள்ளதாக பேஸ்புக் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. 2018ஆம் ஆண்டில் 4ஆவது காலாண்டில் போலி கணக்குகள் 11 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும்‌, 2015ஆம் ஆண்டில் இது 5 சதவிகிதமாகவே இருந்ததாகவு‌ம் பேஸ்புக் தெரிவித்துள்ளது. 

அதாவது 2015 டிசம்பர் 31ன் படி மாத அடிப்படையில் பேஸ்புக்கை பயன்படுத்தியவர்கள் 159 கோடி பேர் பயன்படுத்தியதாகவும், ஆனால் 2018 டிசம்பர் 31 கணக்கின்படி 232 கோடி பேர் பேஸ்புக்கை பயன்படுத்துவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக பிலிப்பைன்ஸ், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் போலி கணக்குகள் அதிகரித்து இருப்பதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

நாள் அடிப்படையில் கணக்கிடும்போதும் பேஸ்புக் பயனாளர்கள் கடந்த 3 ஆண்டுகளில் அதிகரித்து உள்ளனர்/ 2015ல் 140 கோடியாக இருந்த பயனாளர்கள் 2018ம் ஆண்டு 152 கோடியாக அதிகரித்துள்ளது. இது 9 சதவீத உயர்வு என பேஸ்புக் தெரிவித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close