[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் செப்.24ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோவை டெல்லியில் வெளியிட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் நிபுணர் குழுவின் ஆய்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் கடிதம்
  • BREAKING-NEWS பாஜக அரசால்தான் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் - அமித்ஷா
  • BREAKING-NEWS சுதந்திர இந்தியாவில் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி காலமானார்
  • BREAKING-NEWS சென்னையில் ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்வு
  • BREAKING-NEWS புழல் சிறையில் வார்டன்கள் அதிரடி இடமாற்றம்

ஊடுருவும் ஆண்ட்ராய்டு வைரஸ்கள் : ஸ்மார்ட்போன் யூசர்ஸ் உஷார்..!

10-of-the-most-dangerous-android-viruses-and-how-to-get-rid-of-them

தற்போதைய காலக் கட்டத்தில் செல்போன்கள் இல்லாதவர்கள் என கணக்கெடுத்தால் நூற்றுக் கணக்கில் கூட இருக்கமாட்டர்கள். ஏனெனில் சிட்டி முதல் பட்டி தொட்டி வரை செல்போன்கள் சென்றுவிட்டது. இளைஞர்களை பொறுத்தவரையில் ஸ்மார்ட்போன் இல்லாதவர்களை காண்பது அரிது. ஸ்மார்ட் போன்களை முக்கியமாக அவர்கள் வாங்குவதற்கு காரணம் வாட்ஸ்-அப், ஃபேஸ்புக், ட்விட்டர், கேமரா, போட்டோ எடிட், கேம்ஸ், உள்ளிட்டவற்றை உபயோகிக்கத்தான். இதையெல்லாம் பயன்படுத்தப்படும் ஒரு ஸ்மார்ட்போனின் வேகம் என்பது 6 மாதத்திலேயே குறைந்துவிடுகிறது. சில நேரங்களில் ஸ்மார்ட்போன் ஹேங்க் ஆகி முற்றிலும் முடங்கிப்போகிறது. 

இது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஏற்படும் சாதாரண பிரச்னை தான். ஆனால் சில நேரங்களில் வைரஸ் மூலம் ஏற்படும் ஹேங்கிங் உங்கள் ஸ்மார்ட்போனை முற்றிலும் முடங்கிப்போகச் செய்யும். சில நேரங்களில் உங்கள் தகவல்கள் முற்றிலும் அழிந்துபோகும். அதுமட்டுமின்றி உங்கள் தகவல்கள் அனைத்தும் திருடப்பட்டு, சில ஹேக்கர்களால் அவை முறைகேடாக கையாளப்படும். 

இதற்காக சர்வதேச அளவில் சில ஹேக்கர்கள் வைரஸை உற்பத்தி செய்து இணையத்தில் பரப்பி வருகின்றனர். இந்த வைரஸ்கள் எத்தகைய இணையதளங்களையும் முடக்கும் தன்மை கொண்டவை. இதுபோன்று அவ்வப்போது அதிகாரப்பூர்வ சில இணையதளங்களையே ஹேக்கர்கள் முடக்குவதை நம்மால் செய்தியின் மூலம் காண முடியும். ஆனால் இதுபோன்ற வைரஸ்கள் உங்கள் ஆண்ட்ராய்டு போன்களை பாதிக்கின்றது என்பதே உண்மை. 

இந்த வைரஸ்கள் இணையதளம், அங்கீகாரம் அற்ற ப்ரோஸர்கள், ப்ளே ஸ்டோரில் நீங்கள் பதிவிறக்கம் செய்யும் முறைகேடான அப்ஸ்கள், சில கேம்கள் மூலம் உங்கள் ஸ்மார்ட்போன்களில் ஊடுறுவுகின்றன. அவ்வாறு வரும் வைரஸ்கள் உங்கள் டேட்டாக்களை திருடுவதுடன், உங்கள் போனையே முடக்கும் தன்மை கொண்டதாகும். இதில் மிகவும் அபாயகரமான டாப் 10 வைரஸ்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. 

காட்லெஸ் (GodLess)

சேடூன் (Schedun)

கன்பொடெர் (Gunpoder)

ஹம்மிங்பேட் (Hummingbad)

க்ளோனெட் மற்றும் காபியிடு அப்ஸ் (Cloned and Copied Apps)

ட்ராய்டுஸ்நேக் டைப் ஏ (DroidSnake Type A)

ஜெய்னிமி (Geinimi)

ஜிஹாச்சி (Zeahache)

ட்ராய்டு ட்ரீம் (DroidDream)

யூக்ஸிப் (Uxipp)

இந்த வைரஸ்களை நீங்கள் அங்கீகாரம் பெற்ற அப்ஸ்களை பயன்படுத்துவது, பாதுகாப்பான ஆண்டிவைரஸ்களை உபயோகிப்பது மற்றும் தேவையற்ற இணையதள லிங்குகளை கிளிக் செய்வதை தவிர்ப்பது போன்றவை மூலம் தவிர்க்கலாம். 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close