[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது!
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்
  • BREAKING-NEWS “மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை
  • BREAKING-NEWS நிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு
  • BREAKING-NEWS குடியுரிமை மசோதாவில் மாற்றம் செய்யாவிடில் ஆதரவில்லை: உத்தவ் தாக்கரே

நிலநடுக்கத்தை முன்கூட்டியே அறிய 'மை ஷேக்' மொபைல் ஆப்..!

new-my-shake-app-records-earthquakes

இன்றைய கலியுலகில் அடுத்தது என்ன நிகழுமோ என்ற அளவிற்கு இயற்கை சீற்றங்கள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் நிலநடுக்கம் வருவதை முன்கூட்டியே அறியும் வாய்ப்பு கிடைத்தால் அனைவரும் உஷார் தான்... இதற்காக அறிமுகபடுத்தப்பட்டுள்ளது ‘மை ஷேக்’ மொபைல் ஆப்.

நிலநடுக்கம் வருவதை இந்த ஆப் மூலம் எளிதாக முன்கூட்டியே அறியலாம். அண்ட்ராய்டு மொபைல்களில் கூகுள் ப்ளே ஸ்டோரில் இந்த ஆப்பை டவுன்லோட் செய்து கொள்ளலாம். சீஸ்மோமீட்டர் எனும் கருவியினால் மொபைலில் உள்ள ஜிபிஸ் மூலம் இந்த அதிர்வுகள் உணரப்பட்டு அறிவிக்கப்படுகிறது. இது வரை இரண்டு லட்சம் பேர் இந்த ஆப்பை பதிவிறக்கம் செய்துள்ளனர்.

ரிக்டர் அளவில் 2.5 அளவு தோன்றும் சில சிறிய நில அதிர்வுகளை முன்கூட்டியே இந்த ஆப் தெரிவித்துவிடும். மை ஷேக் ஆப் மொபைல் நெட்வொர்க்கில் சேவை மையமாக செயல்பட்டு செய்தியை அனுப்புகிறது. இதன்மூலம் நிலநடுக்கம் இடம் மற்றும் அதிர்வின் அளவு தெரிவிக்கப்படுகிறது.

இந்த மொபைல் ஆப்பை கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து அந்த கல்லூரியின் பேராசிரியர் ரிச்சர்ட் ஆலன் கூறுகையில், மை ஷேக் சிறப்பாக செயல்படுகிறது. அளப்பரிய தரவுத்தொகுப்புகளை கூட வழங்குகிறது. மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் சாதனமாக இந்த மை ஷேக் உள்ளது. சில விநாடிகளில் இது வழங்கும் எச்சரிக்கை ஏராளமான மக்களுக்கு பாதுகாப்பை அளிக்கிறது எனக் கூறியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close