[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது

“சர்வாதிகாரத்தை ஏற்க மாட்டோம் என நிரூபிக்கும் நேரம்” - கமல்ஹாசன்

kamalhassan-campaing-in-manappaarai

அனைவரும் தவறாது வாக்களித்து தமிழகத்தில் மாற்றம் ஏற்பட வித்திட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டு உள்ளார்.

நாமக்கல் மற்றும் கரூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தமது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார். 

பரப்புரையின்போது பேசிய அவர், தமிழகத்தில் ஏ.டி.எம்.களை விட மதுபானக் கடைகளே அதிகம் உள்ளதாக விமர்சித்தார். அரசின் அலட்சியத்தால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டிய கமல்ஹாசன், இந்த அவலம் மாற தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

தாமரை மலரும் என்பதற்காக சேற்றை கொண்டு வந்து கொட்டுவதாக சாடிய அவர், சர்வாதிகாரத்தை இந்தியா என்றுமே ஏற்காது என்பதை நிரூபிக்கும் நேரம் வந்துவிட்டதாக கூறினார். மாற்றத்தை நோக்கி தமிழகம் தீவிரமாக நகர்ந்து கொண்டிருப்பதாகவும், மாற்றத்திற்கு வித்திடும் நாள் ஏப்ரல் 18 எனவும் குறிப்பிட்டார். 

காவிரி கூட்டு குடிநீர் திட்டம் என்ற ஒன்று செயல்படத்தொடங்கி செயல்படாமல் நிற்கிறது என கமல் விமர்சித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close