[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம்
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விசிகவின் திருமாவளவனுக்கு பானை சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS மக்கள் கணிப்பைத்தான் பார்க்க வேண்டும்; கருத்துக்கணிப்பை முழுமையாக ஏற்க முடியாது - தம்பிதுரை
  • BREAKING-NEWS லண்டன் நீதிமன்றத்தில் வைர வியாபாரி நிரவ் மோடி தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி; இந்திய மதிப்பில் ரூ.4.50 கோடி பிணைத்தொகை செலுத்த தயாராக இருப்பதாக நிரவ் மோடி தரப்பு வாதம்
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தலில் நான் போட்டியிடுவேனா என்பது குறித்து 24 ஆம் தேதி அறிவிக்கப்படும் - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தலில் தான் போட்டியில்லை என மாயாவதி அறிவிப்பு
  • BREAKING-NEWS அரசியலுக்கு வாரிசுகள் வரக்கூடாது என்பது எந்த சட்டத்திலும் இல்லை- மதுரையில் ஒபிஎஸ் பேட்டி

அதிமுக - பாமக ஏற்கெனவே மக்களால் தோற்கடிக்கப்பட்ட கூட்டணி: ஸ்டாலின்

mk-stalin-criticized-admk-pmk-alliance

அதிமுக- பாமக கூட்டணி ஏற்கெனவே கடந்த 2009-ல் மக்களால் தோற்கடிக்கப்பட்ட கூட்டணி என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக- பாமக இடையேயான கூட்டணி உறுதியாகி உள்ளது. அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 7 மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுதவிர ஒரு மாநிலங்களவை தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுது. அதேநேரம் தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு பாமக முழு ஆதரவு கொடுக்கும் என இரண்டு கட்சிகளுடனான கூட்டணி ஒப்பந்தத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிமுக- பாமக கூட்டணி குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அதாவது ஏற்கெனவே கடந்த 2009-ல் அதிமுக- பாமக கூட்டணி மக்களால் தோற்கடிக்கப்பட்ட கூட்டணி என அவர் கூறியுள்ளார்.

‘அதிமுகவின் கதை’ என்ற பெயரில் தமிழக அரசை விமர்சித்து புத்தகம் வெளியிட்ட ராமதாஸ், தற்போது அதே கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளார் என ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.  தமிழக மக்களை பற்றி கவலைப்படாமல் பணத்திற்காக அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்துள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வேலூர் அருகே ஆம்பூரில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின் இதனை தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close