[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது அதிமுக
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னை ஐஐடியில் மாணவர்களின் தற்கொலைகள் குறித்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
  • BREAKING-NEWS ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி புகார் மனு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தெர்தலில் மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சோமநாதன் மத்திய நிதி அமைச்சக செயலாளராக நியமனம்

மக்களுக்கு கொடுப்பதை தடுக்கும் கட்சி திமுக முதல்வர் பழனிசாமி

cm-palanisamy-comment-about-dmk

ஏழைகளுக்கு அரசு சார்பில் கொடுப்பதை தடுக்கும் கட்சி திமுக என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திமுகவை விமர்சித்துள்ளார். 

புதுகோட்டை மாவட்டம் விராலிமலையில் ஜல்லிக்கட்டை பார்வையிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சாலை மார்க்கமாக மதுரை சென்றார். அப்போது திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மேளதாளங்களுடன் அதிமுகவினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து மதுரை மாவட்டம் கள்ளிக்குடியில் நடைபெற்ற அதிமுக நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். 

Related image

அப்போது பேசிய முதலமைச்சர் பழனிசாமி,  “இன்றைக்கு எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள், வேண்டுமென்றே அரசை திட்டமிட்டு குறை கூறிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஆட்சிக்காலத்தில் தமிழகத்திற்கு எந்த திட்டங்களும் நிறைவேற்றப்பட்டதாக தெரியவில்லை. மத்தியிலும்,மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தார்கள். ஆனால் தமிழகம் முன்னேறவில்லை. அவர்கள் குடும்பம் மட்டும் முன்னேறியது. திமுக ஒரு குடும்பத்திற்கான சொந்தக் கட்சி. ஆனால் அதிமுக மக்களுக்கான சொந்த கட்சி என்று கூறினார். மேலும் குழந்தைகள் முன்னேறுவதற்காக கல்வித்துறையில் எண்ணற்ற திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதாகவும் ஏழைகளுக்கு அரசு சார்பில் கொடுப்பதை தடுக்கும் கட்சி திமுக” எனவும் முதல்வர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.  
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close