[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

கர்நாடகாவில் அமைச்சருக்கு சவால் விடும் பெண் கலெக்டர் - தேர்தல் களத்தில் தொடரும் பனிப்போர்

bureaucrat-vs-minister-in-karnataka-rohini-ias-wins-this-round-ec-gives-her-clean-chit

கர்நாடக மாநிலத்தில் மாவட்ட ஆட்சியர் ரோகிணி, அமைச்சர் மஞ்சு இடையே பனிப் போர் தொடர்ந்து வருகிறது. 

கர்நாடகாவின் ஹாசன் மாவட்ட ஆட்சியராக இருப்பவர் ரோகிணி சிந்தூரி. அதேபோல், ஹாசன் மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளராகவும், அமைச்சராகவும் இருப்பவர் மஞ்சு. இருவருக்கும் இடையே சமீப காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. கர்நாடகாவில் மே 12ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கை. தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், ரோகிணிக்கும், மஞ்சுவிற்கும் இடையே ஒருப் பனிப் போரே நிகழ்ந்து வருகிறது.

கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி அடிக்கடி அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஹாசன் மாவட்ட கலெக்டராக இருக்கும் ரோகிணி சிந்தூரி, கர்நாடக மாநில தொழிற்சாலை மற்றும் அடிப்படை வசதிகள் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருடன் 7 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்கள். இதனையடுத்து மாநில அரசு ஏழு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து பிறப்பித்த உத்தரவுக்கு கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் தடை விதித்தார். 

பாஜக மாவட்ட நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில் அமைச்சர் மஞ்சு மீது ரோகிணி ஊழல் புகார் கூறியிருந்தார். தேர்தல் நடத்தை அமலுக்கு வந்த பிறகு நிலம் ஒதுக்கீடு செய்ததாக ரோகிணி புகார் தெரிவித்தார். அதேபோல், கடந்த மார்ச் 31ம் தேதி அமைச்சர் மஞ்சுவின் அலுவலகத்தை பூட்டு போட்டு போட்டார். தேர்தல் விதிமுறை அமலில் உள்ள நிலையில் அரசு அலுவலகத்தை கட்சி பணிகளுக்காக பயன்படுத்துவதாக கூறி மஞ்சுவிற்கு நோட்டிஸும் அனுப்பினார். இதனால், மாவட்ட ஆட்சியரான ரோகிணிக்கும், காங்கிரஸ் அமைச்சர் மஞ்சுவிற்கும் இடையே மோதல் போக்கு நிலவியது. 

சில தினங்களுக்கு முன் அமைச்சர் மஞ்சு தேர்தல் விதிமுறைகள் அமலில் இருந்தும், அவற்றை மீறும் வகையில் ஹாசனில் உள்ள தனது அலுவலகத்தில் கதவை வெளியில் பூட்டி வைத்து அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இச்சம்பவம் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதை அறிந்த மாவட்ட தேர்தல் அதிகாரி ரோகிணி, அமைச்சர் மஞ்சு மீது வழக்கு பதிவுசெய்ய தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

இதனையடுத்து, கால்நடை வளர்ப்பு துறை அமைச்சரான மஞ்சு, “ரோகிணி பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும். அவர் தன் மீது அவதூறு செய்கிறார்” என்று கூறி ரோகிணிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்தார். மனுவை விசாரித்த தேர்தல் ஆணையம் மாவட்ட தேர்தல் அதிகாரியும், துணை ஆணையருமான ரோகிணி மீதான புகாரில் ஆதாரமில்லை என்று கூறியுள்ளது. அதேபோல், தேர்தல் நடத்தை விதிமீறல் செய்ததாக அமைச்சர் மஞ்சு மீதான புகார் குறித்த விசாரணை தொடர்ந்து வருவதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தன் மீதான குற்றச்சாட்டை ரோகிணி வெற்றிகரமாக முறியடித்துள்ளார்.

         

இதனிடையே, முதலமைச்சர் சித்தராமையா ஹாசன் மாவட்டத்திற்கு வந்த போது அவரை வரவேற்க ரோகிணி வரவில்லை. இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு ரோகிணிக்கு அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இருப்பினும் தனிப்பட்ட முறையில் எந்த காரணமும் இல்லை என்று ரோகிணி விளக்கம் அளித்தார். எந்தவித அச்சமும் இல்லாமல் தைரியமாக செயல்படுவதாக கூறி பெண் கலெக்டர் ரோகிணிக்கு ஆதரவாக சமூகவலைத்தளங்களில் பலரும் தங்களது கருத்தினை பதிவிட்டுள்ளனர். மேலும் அவருக்கு ஏராளமான பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close