[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சமூகத்தின் மிகப்பெரிய பிரச்னை சாதி; நாட்டில் இன்னும் சாதி வேற்றுமை உள்ளது - ப.சிதம்பரம்
  • BREAKING-NEWS பாஜகவின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது- தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS மாநில உரிமைகளில் ஆளுநர் தொடர்ந்து தலையிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது- மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மதுரையில் அமைக்கப்பட உள்ள் எய்ம்ஸ் போல் மேலும் ஒரு எய்ம்ஸ் வந்தாலும் நல்லதுதான் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS பிரதமர் மோடி கூட்டாட்சி தத்துவத்தை மறந்துவிட்டார்- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

ஸ்டாலினுடன் வைகோ திடீர் சந்திப்பு

mk-stalin-vaiko-sudden-meets

கோவை விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலினை வைகோ திடீரென சந்தித்து பேசினார்.

திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கோவை விமான நிலையத்தில் இன்று திடீரென சந்தித்து பேசினார். ஆர்.கே.நகர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மதிமுகவின் நிலைப்பாடு என்ன என்பது இதுவரை தெரியவில்லை. திமுகவோ கடந்த முறை களமிறக்கிய மருதுகணேஷை மீண்டும் வேட்பாளராக அறிவித்துள்ளது. திமுகவிற்கு காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்டவை ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் ஸ்டாலின்- வைகோ சந்தித்தது அரசியல் ரீதியான சந்திப்பா என கேள்வி எழும்பியது. ஆனால் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள வைகோ, அரசியல் நாகரிகம் காரணமாக சந்தித்துப் பேசுவதில் தவறில்லை என தெரிவித்துள்ளார். மேலும், ஆர்.கே.நகர் தேர்தல் தொடர்பாக ஸ்டாலினுடன் எதுவும் பேசவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close