[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திரிபுரா மாநிலத்தில் உள்ள 59 சட்டபேரவை தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது
  • BREAKING-NEWS கடலில் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் விரட்டியடிப்பு
  • BREAKING-NEWS இன்றைய விலை: பெட்ரோல் ரூ.74.74; டீசல் ரூ.65.96
  • BREAKING-NEWS முன்னாள் மத்திய அமைச்சர் இ.பொன்னுசாமி அதிமுகவிலிருந்து விலகி மீண்டும் பாஜகவில் இணைந்தார்
  • BREAKING-NEWS டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜக தலைமை அலுவலகம் நாளை திறப்பு
  • BREAKING-NEWS காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் கர்நாடகா எதிர்க்கும் - கர்நாடகா முதல்வர் சித்தராமையா
  • BREAKING-NEWS பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த முறைகேடு குறித்து பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் - ராகுல் காந்தி

ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது

the-supreme-court-today-enquires-into-the-objection-of-the-mlas-eligibility-for-ops-support


ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 12 பேரை தகுதி நீக்கம் செய்யக்கோரும் வழக்கை உச்சநீதிமன்றம் மட்டுமே விசாரிக்க வேண்டுமெனக்கோரி,  செம்மலை தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி மாதம் 18ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது தனி அணியாக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் 11 எம்எல்ஏக்களும், எம்எல்ஏ அருண்குமாரும் கொறடா உத்தரவை மீறியதாகவும், அவர்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிட கோரி திமுக கொறடா சக்கரபாணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

இதனையடுத்து, உயர்நீதிமன்றத்திலிருக்கும் இந்த வழக்கை உச்சநீதிமன்றத்‌துக்கு மாற்ற வேண்டுமென வலியுறுத்தி செம்மலை எம்எல்ஏ கடந்த 13ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில் சபாநாயகர் தொடர்புள்ள விவகாரத்தை உச்ச நீதிமன்றம் மட்டுமே விசாரிக்க முடியும் என அவர் கூறியிருந்தார். இந்நிலையில் இந்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close