[X] Close
JUST IN
 • BREAKING-NEWS மருத்துவமனையில் இருந்தபோது ஜெயலலிதா கைரேகை வைத்ததில் சிபிஐ விசாரணை தேவை: ஸ்டாலின்
 • BREAKING-NEWS தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களின் விவரம் சட்டப்பேரவை இணையதளத்தில் இருந்து நீக்கம்
 • BREAKING-NEWS பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு
 • BREAKING-NEWS முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு வருமானவரித்துறை சம்மன்
 • BREAKING-NEWS சென்னை பல்லவன் இல்லத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஆலோசனைக்கூட்டம் தொடங்கியது
 • BREAKING-NEWS சென்னை தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் ஸ்ரீதரன் என்பவர் உயிரிழந்ததாக புகார்
 • BREAKING-NEWS சாதாரண தொண்டர்களுக்கும் பதவி கிடைக்கும் இயக்கம் அதிமுக என தம்பிதுரை எம்.பி. பெருமிதம்
 • BREAKING-NEWS நாமக்கல்: மணிக்கட்டிபுதூர் அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு
 • BREAKING-NEWS கிருஷ்ணகிரியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொடங்கியது - முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு
 • BREAKING-NEWS 17 ஆண்டுகளாக வயிற்றில் 12 இன்ச் ரப்பர் குழாயுடன் வாழ்ந்த பெண்!!!
 • BREAKING-NEWS சென்னையில் எடை குறைப்பு சிகிச்சையால் பெண் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்தப்படும்: சுகாதாரத்துறை செயலாளர் தகவல்
 • BREAKING-NEWS சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்த விபத்தில் காயமடைந்தவர்களின் உறவினர்கள் திருச்சி- கோவை சாலையில் போராட்டம்
 • BREAKING-NEWS சென்னை ஆதம்பாக்கம் அருகே போலீஸ்போல் நடித்து மூதாட்டியிடம் இருந்து 6 சவரன் கொள்ளை
 • BREAKING-NEWS கரூரில் அரசு பணி ஒப்பந்ததாரர் சங்கர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை
அரசியல் 13 Sep, 2017 09:15 PM

மிகப் பெரிய போர் தொடுக்க வேண்டும்: ஸ்டாலின்

mk-stalin-request-to-tn-people

தமிழகத்தை காக்க, மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு மிகப்பெரிய போரைத் தொடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தாம்பரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், " ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டிருந்தோம். இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் அனுமதி கிடைத்தது. நான், எங்கள் கட்சியில் உள்ள சில எம்எல்ஏக்கள், காங்கிரஸ், இ.கம்யூ., கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் தெளிவாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்ற நிலைப்பாட்டை தெரிவித்தோம். ஆனால் அடுத்த நாளிலே, விமானம் மூலம் ஆளுநர் மும்பைக்கு சென்றுவிட்டார் என செய்தி வருகிறது. அதனால்தான் நீதிமன்றத்தை நாடி வழக்குப்பதிவு செய்தோம். நாளை அவ்வழக்கு விசாரணைக்கு வரும்போது, ஜனநாயகத்தின் அடிப்படையில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நிர்வாகத்தில் ஸ்தம்பித்து இருக்கும் தமிழகத்தை காக்க வேண்டும் என்றால், தமிழக மக்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டும். மிகப்பெரிய போரை தொடுத்திட வேண்டும். அதற்கான காலம் கனிந்துகொண்டிருக்கிறது" என்றார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க, ஆளுநர் உத்தரவிடக் கோரி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close