[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் இருதரப்பினர் இடையே மோதல்; வீடுகள் வாகனங்கள் நொறுக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் குவிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் மதுரை மக்களவை தொகுதியை தவிர்த்து மற்ற அனைத்து தொகுதிகளிலும் மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் பழுதான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற வேண்டும்; வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதால் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்கவும் கோரிக்கை - தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் வலியுறுத்தல்
  • BREAKING-NEWS பெரம்பலூர் தொகுதியில் உள்ள வெங்கலம் அரசு தொடக்க பள்ளி வாக்குச் சாவடியில் அதிமுகவினர் குடிபோதையில் ரகளை என புகார்
  • BREAKING-NEWS தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி வெறும் 4.86% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன

அரசியல் பற்றி பேச கமல்ஹாசனுக்கு உரிமையுண்டு: ஓபிஎஸ்

o-panneer-selvam-tell-about-kamal-hassan

நடிகர் கமல்ஹாசன் உலக நடிகர் என்றும், அரசியல் பற்றி பேச‌வதற்கும், விமர்சிப்பதற்கும் அவருக்கு உரிமை உள்ளது என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஆளும் கட்சியும்-எதிர்க்கட்சியும் மறைமுகமாக கூட்டு வைத்து செயல்படுவதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் புகார் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார். மேலும், ஆளும் கட்சியை பற்றி வெளியில் குறை கூறும் திமுக, சட்டப்பேரவையில் மக்கள் பிரச்னைகள் பற்றி வாயே திறப்பதில்லை எனத் தெரிவித்தார். நடிகர் கமல்ஹாசன் உலக நடிகர் என்றும், அரசியல் பற்றி பேச‌வதற்கும், விமர்சிப்பதற்கும் அவருக்கு உரிமை உள்ளது எனவும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி சார்பாக நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் பேசிய அவர்,  தலைமைக்கழகம் செல்ல தனக்கும் அவைத்தலைவர் மதுசூதனனுக்கும் மட்டுமே உரிமை உண்டு என்றும் அவர் தெரிவித்தார்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close