[X] Close
JUST IN
 • BREAKING-NEWS புதுச்சேரியில் நகர பேருந்துகளில் ஆரம்பநிலை கட்டணம் ரூ.5இல் இருந்து ரூ.7ஆக உயர்த்தி மாநில அரசு அறிவிப்பு வெளியீடு
 • BREAKING-NEWS கடந்த ஓராண்டில் எல்லை பாதுகாப்புப் படையினரின் திறமையை நாடே அறிந்துள்ளது: ராஜ்நாத் சிங்
 • BREAKING-NEWS ஆட்சியை கலைத்து விட்டு முதல்வர் ஆவதே ஸ்டாலினின் கொள்கையாக உள்ளது: அமைச்சர் வேலுமணி
 • BREAKING-NEWS இன்று தமிழகத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 11 பேர் உயிரிழந்தனர்
 • BREAKING-NEWS ஐஃபோன் 7 வாங்க ரூ.7,777 முதல் தவணை: ஏர்டெல் ஆஃபர்!
 • BREAKING-NEWS வரும் 25 ஆம் தேதிக்கு பிறகுதான் வடகிழக்கு பருவமழை தொடங்கும்:வானிலை மையம்
 • BREAKING-NEWS தனியார் மருத்துவமனைகள் டெங்கு உயிரிழப்பு பற்றிய சான்றை தரக்கூடாது என மிரட்டல் விடுக்கப்படுகிறது: ஸ்டாலின்
 • BREAKING-NEWS இன்று தமிழகத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 9 பேர் உயிரிழந்தனர்
 • BREAKING-NEWS தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மக்களுக்கு வாழ்த்து
 • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 23,327 கன அடியில் இருந்து 15,667 கன அடியாக குறைவு
 • BREAKING-NEWS உலகின் இளம் பிரதமருக்கு தலைவர்கள் வாழ்த்து
 • BREAKING-NEWS எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையால் கைது
 • BREAKING-NEWS ஊத்தங்கரை அடுத்த நாகனூரில் வைரஸ் காய்ச்சலுக்கு ராஜா என்பவர் உயிரிழப்பு
 • BREAKING-NEWS டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் 2 ஆவது தளத்தில் உள்ள அறை எண் 242 இல் தீ விபத்து
அரசியல் 05 Aug, 2017 09:26 PM

ஓபிஎஸ் ஆர்ப்பாட்டம்...அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை: துரைமுருகன்

durai-murugan-criticized-ops-protest

திமுக அரசில் நேற்று வரை இருந்த ஓ.பன்னீர்செல்வம் இன்று குடிநீருக்கு ஆர்ப்பாட்டம் நடத்துவதாக வந்த செய்தியைப் படித்த போது அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை என திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ''அதிமுகவிலிருந்து பிரிந்து வந்து ஒரு சிறு குழுவை வைத்துக் கொண்டு, ''அதிமுக கட்சியும் எனதே! அடுத்த முதல்வர் பதவியும் எனதே!'' என்று அரசியல் உலகில் ஜீவித்துக் கொண்டிருக்கும் மூன்று முறை முதல்வர் நாற்காலியை அலங்கரித்த பன்னீர்செல்வமும், அவருடைய அண்ட் கோ-க்களும், சென்னை குடிநீர் பிரச்சினைக்காக ஆர்ப்பாட்டம் செய்யப் போவதாக பத்திரிகைகளில் படித்தபோது, அழுவதா, சிரிப்பதா என்றே தெரியவில்லை" என்று கூறியுள்ளார்.

"சென்னை என்பது ஒரு நகரம். அங்கு மக்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கு உயிர்வாழ குடிக்க தண்ணீர் அவசியம். அதைத் தரவேண்டியது அரசின் கடமை என்ற ஞானோதயம் பன்னீர்செல்வத்திற்கு இப்பொழுதுதானா வந்தது?" என்று கேள்வி எழுப்பியுள்ள துரைமுருகன், "ஐயோ, பாவம்! சென்னை மக்கள்..!" என்று கூறியுள்ளார்.

"கிருஷ்ணா நீரை சென்னைக்கு கொண்டு வரும் திட்டத்திற்கு 1983ஆம் ஆண்டு, அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரும், ஆந்திர முதல்வர் என்.டி.ராமாராவும் ஒருவித உடன்படிக்கைக்கு வந்தார்கள், அவ்வளவுதான். அடுத்து ஒரு காரியமும் நடைபெறவில்லை. பின்னர், எம்.ஜி.ஆர். மறைந்தார், திட்டமும் கிடப்பில் கிடந்தது.1989-ல்  கருணாநிதி ஆட்சிக்கு வந்து அந்தத் திட்டத்தை தூசு தட்டி, கையில் எடுத்து, ஆந்திர அரசாங்கத்தோடு ஒப்பந்தம் போட்டார். அந்த ஒப்பந்தப்படி, கிருஷ்ணா நதிக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள ஸ்ரீசைலம் அணையிலிருந்து - சோமசீலா மற்றும் கண்டலேறு நீர்த்தேக்கங்கள் வழியாக, கால்வாய் வெட்டி, 12 டி.எம்.சி. தண்ணீரை பூண்டி நீர்த்தேக்கத்துக்கு கொண்டு வந்து சேர்ப்பது, பின்னர் புழல் ஏரி வழியாக சென்னை மாநகர மக்களுக்கு குடிநீராக வழங்குவது என்பது திட்டம். இந்த மகத்தான பொறுப்பை முதல்வர் கருணாநிதி என்னிடம் ஒப்படைத்தார். அந்த பணிசெவ்வனே முடிக்கப்பட்டு, சென்னைக்கு கிருஷ்ணாநதி நீர் தரப்பட்டது. அதே போல் கடல்நீரை குடிநீராக்கி சென்னை மக்களுக்கு வழங்கும் திட்டத்தையும் அன்றைய முதல்வர் தலைவர் கருணாநிதியின் ஆணைக்கு ஏற்ப செய்து முடித்தவர், அத்துறை அமைச்சராக இருந்த ஸ்டாலின். 
மாமல்லபுரம் போகும் கிழக்கு கடற்கரைச் சாலையில் நெம்மேலி என்ற இடத்தில், நாள் 1க்கு 100 மில்லியன் லிட்டர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தைத் துவக்கி, அதன் எல்லா பணிகளும் முடித்த போது எங்கள் ஆட்சி கலைக்கப்பட்டது. ஜெயலலிதா, இத்திட்டத்திற்கு ஒரு துரும்பைக்கூட எடுத்துப் போடாமல், ஆனால் இந்த திட்டத்தை திறந்து வைத்து தன் பெயரை மட்டும், கல்வெட்டில் போட்டுக் கொண்டார்.

மீஞ்சூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தையும் துவக்கியவரும் கருணாநிதிதான். இங்கேயும் நாள் 1க்கு 100 மில்லியன் லிட்டர் கடல்நீர் DBOOT திட்டப்படி, குடிநீராக்கி சென்னைக்கு வழங்கினார். இங்கேயும் அதிமுக அரசின் பங்கு பூஜ்யம்.
அத்திபூத்தது போல், அதிமுக ஆட்சியிலும் ஒரு திட்டம் வந்தது. அதுதான் புதிய வீராணம் திட்டம். வீராணம் ஏரி, காவிரியை நம்பி இருக்கும் ஏரி. காவிரியில் தண்ணீர் வராதபோது, வீராணத்தில் தண்ணீர் இருக்காது. எனவே, இத்திட்டம் பெயர் அளவிற்குத்தான் உள்ளது.
திமுக அரசில் நேற்று வரை இருந்த ஓ.பன்னீர்செல்வம் இன்று குடிநீருக்கு ஆர்ப்பாட்டம் நடத்துவது கேலிக்குரியது. இந்த அரசை நினைத்தால், இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்கள் இந்த நாட்டிலே என்று எம்.ஜி.ஆர். பாடியதுதான் நினைவுக்கு வருகிறது'' என்று துரைமுருகன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close