[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆந்திரா: தேவிபட்டணம் பகுதியில் கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 33 பேர் நீரில் மூழ்கியதாக தகவல்; தேடும் பணி தீவிரம்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

ஆன்லைன் மூலம் பிறப்பு இறப்பு சான்றிதழ்கள்

birth-and-death-details-will-be-publishing-in-online-soon-minister-vijayabaskar

தமிழகம் முழுவதும் பிறப்பு இறப்பு விவரங்கள் ஆன்லைனில் கிடைக்க வழிவகை செய்யப்படும் என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட விஜயபாஸ்கர், சென்னை மாநகராட்சியில் இந்த விவரங்கள் ஏற்கனவே ஆன்லைனில் கிடைப்பதை சுட்டிக்காட்டினார். இது மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் எனவும் அவர் கூறினார். தமிழகத்தில் 98 சதவீதம் பிறப்புகள் மருத்துவமனைகளில் நடைபெறுவதால் அனைத்து பிறப்புகள் குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க மருத்துவமனைகளுக்கு உத்தரவிடப்படும் என அமைச்சர் தெரிவித்தார். அதைப் போலவே மயானங்கள், இறப்பு தொடர்பான விவரங்களை அதிகாரிகளிடம் பதிவு செய்ய உத்தரவிடப்படும் என அமைச்சர் கூறினார். இதன்மூலம் அனைத்து இறப்புகளும் பதிவு செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ் மூன்று வாரங்களுக்குள் ஆன்லைனில் கிடைக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இதன்மூலம் மக்கள் இறப்புச் சான்றிதழுக்காக அலைவது தவிர்க்கப்படும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close