[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது!
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்
  • BREAKING-NEWS “மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை
  • BREAKING-NEWS நிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு
  • BREAKING-NEWS குடியுரிமை மசோதாவில் மாற்றம் செய்யாவிடில் ஆதரவில்லை: உத்தவ் தாக்கரே

சின்னம்மா சொல்லுறவுங்களுக்குதான் என் ஓட்டு

actor-karnas-mla-meets-ttv-dhinakaran-answers-press-about-presidential-election

குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளர் சசிகலா சொல்கிறார்களோ அவர்களுக்குதான் வாக்களிப்பேன் என்று முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பது குறித்து ஆளும் அதிமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகளிடையே குழப்பம் நிலவி வருகிறது. இந்த நிலையில் அதிமுகவின் கூட்டணிக் கட்சியான முக்குலத்தோர் புலிப்படையின் தலைவர் நடிகர் கருணாஸ், அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து தினகரனிடம் எதுவும் பேசவில்லை. அவர் சிறையிலிருந்து வந்த பிறகு நான் சந்திக்கவில்லை என்பதால் மரியாதை நிமித்தமாக சந்திக்க வந்தேன். என்னைப் பொருத்தவரை எனக்கு எம்.எல்.ஏ. சீட் கொடுக்க வேண்டும் என்று அம்மாவிடம் பரிந்துரைத்ததே, சின்னம்மாதான். எனவே குடியரசுத் தலைவர் தேர்தலில், அவர்கள் யாருக்கு வாக்களிக்கச் சொல்கிறார்களோ அவர்களுக்குதான் என் ஓட்டு. எனவே எங்களுடைய ஆதரவு யாருக்கு என்பதை விரைவில் டிடிவி தினகரன் அறிவிப்பார்” என்றார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அம்மா அணி, ஏற்கனவே பாஜக வேட்பாளரை ஆதரித்துள்ளது. சமீபத்தில் மத்திய அரசின் மாட்டிறைச்சி தடைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றாததைக் கண்டித்து சட்டமன்றத்தில் இருந்து கருணாஸ் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close