[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரான்ஸில் இன்று நடைபெறும் ஜி7 நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
  • BREAKING-NEWS உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து
  • BREAKING-NEWS லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பெண் உள்பட இருவர் கேரளாவில் கைது

டிடிவியின் கட்டுப்பாட்டில் அதிமுக: நாஞ்சில் சம்பத்

admk-is-in-ttv-dhinakaran-s-hand-nanjil-sampath

 

அதிமுக டிடிவி-யின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "டிடிவி தினகரனுக்கு நாளுக்கு நாள் செல்வாக்கு பெருகி வருகிறது. இது தமிழகத்தில் யாரும் எதிர்பாராதது. அதிமுக எம்எல்ஏ-க்கள் மட்டுமில்லாமல், கழக நிர்வாகிகள் அனைவரும் டிடிவி தினகரன் தான் தலைமை ஏற்க வேண்டும், எங்களை வழிநடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டு வருகின்றனர். இதற்கான ஆற்றலும், அரவணைத்துச் செல்கிற குணமும், ஜனநாயக பண்பும், தமிழக அரசியலில் டிடிவி தினகரனுக்கு மட்டும் தான் இருக்கிறது. அதிமுக கட்சியும் தினகரனின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. சந்தித்த எம்எல்ஏ-க்கள் மட்டுமில்லாமல் சந்திக்காதவரின் சிந்தையிலும் அவர் தான் இருக்கிறார்.


விரைவில் தேர்தல் வரும் என்று சொல்கிறவர்களின் எண்ணம் நிறைவேறபோவதில்லை. எந்தவித பேதமும், பிளவும் இல்லாமல் இரட்டை இலை சின்னத்தை மீட்டு, கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற டிடிவி தினகரன் எடுக்கிற முயற்சி வரும் காலத்தில் பொதுமக்கள் மத்தியில் நல்ல மதிப்பை ஏற்படுத்தும்" என்றார். அதிமுக தலைமை அலுவலத்திற்கு பணியாற்ற டிடிவி இன்று கூட போகலாம் என்று கூறி நாஞ்சில் சம்பத், ஓபிஎஸ், இதைப் பயன்படுத்திக் கொண்டு தேர்தல் ஆணையத்தையோ, சட்ட ரீதியாகவோ ஏதாவது பிரச்னையை உருவாக்க முயற்சிப்பார் எனவும் தெரிவித்தார். 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close