[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வாகன ஓட்டு‌நர் உ‌ரிமம் பெறுவதற்கான குறைந்த‌பட்ச கல்வி தகுதியை அடியோடு நீக்கம் செய்ய மத்திய அரசு முடிவு ‌செய்துள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS ஆந்திர போலீஸாருக்கு இன்று முதல் வார விடுமுறை அறிவித்தார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி
  • BREAKING-NEWS மக்களவை சபாநாயகராக பாஜவை சேர்ந்த ஓம் பிர்லா எம்.பி. போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவு
  • BREAKING-NEWS தேர்தல் தோல்வியை அடுத்து கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியை கலைத்தது காங்கிரஸ் கட்சி

ஆந்திராவில் கைதான 32 தமிழர்களுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்: திருப்பதி நீதிமன்றம்

red-sandel-issue-32-tamil-nadu-persons-gets-15-days-jail

ஆந்திராவில் செம்மரம் வெட்டப் போன புகாரில் கைதான 32 தமிழர்களுக்கும் 15 நாள் நீதிமன்றக் காவல் விதித்து திருப்பதி 5வது கூடுதல் நீதிமன்ற நீதிபதி விஜயா உத்தரவு பிறப்பித்துள்ளார். இதைத்‌தொடர்ந்து அவர்கள் அனைவரும் சித்தூர் சிறையில் வரும் 19ம் தேதி வரை அடைக்கப்பட உள்ளனர்.

முன்னதாக இவ்வழக்கில் கைதான 32 பேரும் நீதிமன்றத்தி‌ல் ஆஜர் படுத்தப்பட்டனர். இவர்கள் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆந்திர வனப் பாதுகாப்பு சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில் கைதான தமிழர்களுக்கு திருப்பதி அரசு மருத்துவமனை‌யில் முறையாக மருத்துவ பரிசோதனை செய்யப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது. ஆந்திராவில் செ‌ம்மரம் வெட்ட சென்ற குற்றச்சாட்டின் பேரில் 32 தமிழர்கள் ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் கடந்த 4ம் தேதி கைது செய்யப்பட்ட‌னர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close