[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

2020 ஒலிம்பிக்கில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு வீரர் பங்கேற்கத் தயாராக வேண்டும்: பிரதமர் மோடி

every-player-has-worked-hard-to-get-here-they-will-surely-give-their-best-pm-narendra-modi

2020-ம் ஆண்டில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் மாவட்டந்தோறும் ஒரு வீரர் இந்தியா சார்பில் பங்கேற்கச் செய்யப்படும் என்றும் பிரத‌மர் மோடி தெரிவித்தார்.

‌ரியோ ஒலி‌ம்பிக் போட்டிகளில் பங்கேற்கவுள்ள இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பதக்கங்களை வெல்வதற்கு ஊக்கப்படுத்தும் நோக்கில் டெல்லியில் மாரத்தான் ஓட்டம் நடைபெறுகிறது. அதை பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடங்கியபோது இதைத் தெரிவித்தார்.

ரன் ஃபார் ரியோ என்ற பெயரிலான மாரத்தான் ஓட்டத்தை தொடங்கி வைக்கும் முன்பாக, கூட்டத்தினரிடம் மோடி பேசினார். விளையாட்டுத் துறைக்கு அரசு அளித்து வரும் முக்கியத்துவத்தை அவர் பட்டியலிட்டார். வீரர், வீராங்கனைகளின் பயிற்சிக்காக கூடுதல் நிதி ஒதுக்கப்படுவதாகவும் கூறிய மோடி, ரியோ ஒலிம்பிக்கில் இந்திய வீரர், வீராங்கனைகள் உலக மக்களின் இதயங்களை வெல்வார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல், முதல்முறையாக ஒலிம்பிக் போட்டிக்கு இந்த முறை கூடுதல் வீரர்கள் அனுப்பப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

காலை 8 மணிக்குத் தொடங்கிய மாரத்தான் ஓட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் 20 ஆயிரம் பேர் பங்கேற்றனர். டெல்லியில் நேற்று மாலை வரை பலத்த மழை பெய்து, கடுமையான போக்குவரத்து நெரிசல் நீடித்த நிலையிலும்,‌ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்களை உற்சாகப்படுத்த மாரத்தானில் ஏராளமானோர் பங்கேற்றது பெரும் வரவேற்பைப் பெற்றது. 2020ம் ஆண்டில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் மாவட்டந்தோறும் ஒரு வீரர் இந்தியா சார்பில் பங்கேற்கச் செய்யப்படும் என்றும் பிரத‌மர் மோடி தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close