[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS திருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது!
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்
  • BREAKING-NEWS “மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை
  • BREAKING-NEWS நிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு

நாட்டின் வளர்ச்சியை 8%க்கு மேல் உயர்த்த நடவடிக்கை: பிரதமர் மோடி உரை

india-working-to-achieve-8-pc-growth-modi

இந்தியாவின் வளர்ச்சியை ‌‌8 சதவிகிதத்திற்கு மேல் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்கா நாட்டின் ஜோகன்ஸ்பெர்க்கில், இந்திய வம்சாவளியினரிடையே பேசிய அவர், உலக பொருளாதாரம் மந்தமாக இருக்கிற போதிலும் இந்தியாவின் வளர்ச்சி 7 புள்ளி 6 சதவிகிதமாக இருப்பதாக தெரிவித்தார். வரும் ஆண்டுகளில் அதனை 8 சதவிகிதத்திற்கு மேல், அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மோடி குறிப்பிட்டார். பொருளாதாரத்தில் சர்வதேச அளவில் இந்தியா சிறந்து விளங்குவதாகவும், முதலீடு, வர்த்தகம் மேற்கொள்ள‌ சிறந்த இடமாக திகழ்வதாகவும‌ பிரதமர் கூறினார். நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, வர்த்தகம், உற்பத்தி, கண்டுபிடிப்பு, உலக நாடுகளின் முதலீடு ஆகியவற்றைப் பெறுவதற்கேற்ப கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். 2022ம் ஆண்டிற்‌குள் 50 கோடி வேலைவாய்ப்பை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த மோடி, நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களி‌ன் உள்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close