[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது

பழங்குடியினப் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை: பஞ்சாயத்து பேசிய ஊர் பெரியவர்கள் கைது

telangana-tribal-woman-gang-rape-5-arrested-9-others-held-for-trying-to-settle-case

ஹைதராபாத்தில் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தை பஞ்சாயத்து பேசி முடிக்க முயன்ற ஊர் பெரியவர்கள் 9 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். 

ஹைதராபாத் ரச்சகொண்டா போலீஸ் கூறுகையில், “பழங்குடியினப் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்ததற்காகவும் அந்த பெண்ணின் கணவரை அறையில் அடைத்து வைத்து தாக்கியதற்காகவும் முச்சா பிரசாந்த் ரெட்டி(30), முச்சா அனில் ரெட்டி(26), தேவர்செட்டி பவன் குமார்(29), சி. ஹன்மந்து(25), ஆகிய 5 பேர் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை, 365, 342, 330, 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேலும் இந்த சம்பவத்தை பணம் கொடுத்து நீதிமன்றத்திற்கு செல்லாமல் தடுக்க முயன்ற ஊர் பெரியவர்கள் ரவீந்தர், வெங்கட் ரெட்டி, ஜெதாவத் ரவீந்தர், சரளபள்ளி யாதையா, ஜர்புலா ராஜூ, பாய்கரி சுரேஷ், அனுகு லோகேஷ், விஜய்குமார், முச்சா ஜனார்தன் ரெட்டி ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்திரசேகர் ரெட்டி என்பவர் தலைமறைவாகிவிட்டார். மொத்தம் 10 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். 

பிரசாந்த் ரெட்டி என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது கணவரும் வேலைப்பார்த்து வந்துள்ளனர். அப்போது இவர்கள் சுரேஷ் என்பவருடன் சேர்ந்து கோழிகளுக்கு உணவளிப்பதில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். இது பிரசாந்த் ரெட்டியின் கவனத்திற்கு வந்துள்ளது. இதில் சுரேஷ் என்பவர் ஏற்கெனவே குற்றம் சாட்டப்பட்டவர்களால் தாக்கப்பட்டுள்ளார். 

ஊர் பெரியவர்கள் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது கணவர் மற்றும் சுரேஷ் ஆகியோருக்கு ரூ. 2,50,000 வாங்கி தருவதாக கூறியதையடுத்து அந்த பெண் அவர்களுக்கு எதிராக புகார் கொடுக்கவில்லை. ஆனால் அவர்கள் அந்த பெண்ணின் கணவரை ஹர்சகுடா கிராமத்திற்கு அழைத்து சென்று பஞ்சாயத்து பேசியுள்ளனர். மேலும் அவரை மிரட்டி கையெழுத்தும் வாங்கியுள்ளனர்” எனத் தெரிவித்தனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close