[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் தொடர்‌பான அறிவிப்பாணையை ரத்து செய்தது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS 200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை

ஒரே நேரத்தில் நீதிபதிகளாக பதவியேற்க இருக்கும் கணவன் மனைவி!

man-wife-to-take-hc-judge-oath-together

நாட்டில், முதன் முறையாக, ஒரே நேரத்தில் கணவன் -மனைவி நீதிபதிகளாக பதவியேற்க இருக்கின்றனர்.

நீதிபதிகள் நியமனத்தை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜீயம் அமைப்பு செய்துவருகிறது. இந்த அமைப்பு சமீபத்தில் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்துக்கு விவேக் புரி, அர்ச்சனா புரி உட்பட 6 புதிய நீதிபதிகளை பரிந்துரைத்திருந்தது. 

விவேக் புரி- அர்ச்சனா புரி இருவரும் கணவன் மனைவி ஆவார்கள். விவேக், மொகாலி மாவட்ட செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி யாகவும் அர்ச்சனா, பஞ்சாப் போக்குவரத்து மேல்முறையீட்டு தீர்ப்பாய நீதிபதியாகவும் பதவியேற்க உள்ளனர்.

கணவனும் மனைவியும் ஒரே நேரத்தில் சில நீதிமன்றத்தில் நீதிபதிகளாக இருந்துள்ளனர். ஆனால் இருவரும் வெவ்வேறு நாளில் பதவியேற்று இருப்பார்கள். ஆனால், கணவன் - மனைவி இருவரும் ஒரே நேரத்தில் நீதிபதிகளாக பதவி ஏற்க இருப்பது இதுதான் முதல் முறை என்று கூறப்படுகிறது.  
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close