பஞ்சாப் மாநிலத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 17 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தின் பாடலாவில் உள்ள பட்டாசு தயாரிப்பு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. மக்கள் குடியிருப்பு அதிகமுள்ள பகுதியில் இன்று மாலை 4 மணிக்கு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து காரணமாக கட்டடமும் இடிந்து விழுந்தது. தேசிய பேரிடர் மீட்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். அதேபோல், மாநில பேரிடர் மீட்பு படையினரும் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும், இந்த விபத்தில் சிக்கி 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 50க்கும் அதிகமாக தொழிலாளர்கள் வெடிவிபத்து மற்றும் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த சம்பவம் குறித்து பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் வேதனை தெரிவித்துள்ளார். “பாடாலா பட்டாசு ஆலை விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த துயரம் அடைந்தேன். மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன” என்று அவர் கூறியுள்ளார்.
“குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்” - 5 மாநில அரசுகள் போர்க்கொடி
50 நாட்களை நிறைவு செய்த ‘பிகில்’, ’கைதி’ - ரசிகர்களுக்கு இயக்குநர் நன்றி
சாய்ந்த 50 ஆண்டுகள் பழமையான மரம் - மீண்டும் அழகாக நட்டு வைத்த அதிகாரிகள்
பாலியல் வன்கொடுமைக்கு 21 நாட்களுக்குள் தூக்கு - ஆந்திர பேரவையில் நிறைவேறியது திஷா மசோதா
அசாம் போராட்டத்தால் ஜப்பான் பிரதமரின் இந்திய வருகை ஒத்திவைப்பு?