[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி

ஜம்முவில் 144 தடை தளர்வு - பள்ளி, கல்லூரிகள் திறப்பு

prohibitory-orders-withdrawn-in-jammu-schools-colleges-to-reopen-from-today

ஜம்முவில் 144 தடை உத்தரவு திரும்ப பெறப்பட்டுள்ளதை அடுத்து பள்ளி, கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 ஆவது சட்டப்பிரிவின் சரத்துகளை மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது. அதேபோல், காஷ்மீரை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு தனித்தனி யூனியன் பிரதேசங்களாக பிரிக்கவும் மசோதா நிறைவேற்றப்பட்டு, அதற்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்துள்ளார்.

         

இந்த அதிரடியாக நடவடிக்கைகளுக்காக ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாதுகாப்பு படையினரை மத்திய அரசு குவித்தது. 144 உத்தரவு பல இடங்களில் அமல்படுத்தப்பட்டது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. 

                       

இந்நிலையில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஜம்மு-காஷ்மீரில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, ஜம்முவில் 144 உத்தரவு திரும்ப பெறப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டதை அடுத்து பள்ளி, கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் இன்று பள்ளிக்கு கிளம்பி சென்றனர்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close