[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி

மக்களவை கூட்டத்தொடர் நிறைவு

lok-sabha-adjourned-sine-die

மக்களவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு மீண்டும் பதவியேற்றவுடன் முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடர் கடந்த ஜூன் மாதம் 17ஆம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடரில் மத்திய பட்ஜெட் ஜூலை 5ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்தக் கூட்டத்தொடரில் பல முக்கிய மசோதாக்கள் நிறைவேறின. குறிப்பாக முத்தலாக் தடை மசோதா, என்ஐஏ மசோதா, மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதா, காஷ்மீர் மறு சீரமைப்பு மசோதா உள்ளிட்ட பல முக்கிய மசோதாக்கள் நிறைவேறின. 
இந்நிலையில் மக்களவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close