[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற கூட்டத் தொடர் நீட்டிப்பு? - மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS தோனியிடம் தேர்வுக்குழு பேச வேண்டும்: ஓய்வு விவகாரம் பற்றி சேவாக்!
  • BREAKING-NEWS கடத்தப்பட்ட குழந்தை '10 மணி' நேரத்தில் மீட்பு - வீட்டு பணிப்பெண் காதலனுடன் கைது
  • BREAKING-NEWS டி.என்.பி.எல். தொடர் இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS விடிய விடிய தர்ணா - கர்நாடக சட்டப்பேரவையில் படுத்துறங்கிய எடியூரப்பா

பதிவான வாக்குகள் குறைவு ; எண்ணப்பட்ட வாக்குகள் அதிகம் - அலட்சியம் காட்டும் தேர்தல் ஆணையம்

evm-vote-count-mismatch-in-370-seats-and-ec-refuses-to-explain

நாடு முழுவதும் 370க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை விட எண்ணப்பட்ட வாக்குகள் அதிகம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, அமைச்சரவை கூட உருவாக்கப்பட்டு அதன் முதல் கூட்டமும் நடைபெற்று முடிந்துவிட்டது. ஆனால், தேர்தல் முடிவுகள் குறித்த முழுமையான தகவல்கள் தற்போதுதான் வெளியாகி வருகின்றன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன், ஒரு தொகுதியில் உள்ள 5 வாக்குச்சாவடியில் பதிவாகும் ஒப்புகைச வாக்குச் சீட்டு எண்ணப்பட்டு சரிபார்க்கப்படும் என்பதால் வாக்கு எண்ணிக்கைக்கு கூடுதல் நேரம் ஆகும் என்று முன்பே தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அதற்கேற்றார்போல், நள்ளிரவு வரை வாக்கு எண்ணிக்கை நீடித்தது. ஆனால், தேர்தல் ஆணையம் முழு தகவலை தன்னுடைய இணையதளத்தில் பதிவிட கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டது. 

      

அப்படி தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவல்களை ஆய்வு செய்து சில விஷயங்களை குயிண்ட் வெளியிட்டுள்ளது. அதன்படி, 370க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வாக்குப் பதிவு இயந்திரங்களின் வாக்கு எண்ணிக்கை , பதிவான வாக்குகளின் எண்ணிக்கையுடன் ஒத்துப் போகவில்லை என்று தெரிகிறது. குறிப்பாக, தமிழகத்தைச் சேர்ந்த சில தொகுதிகளின் தகவல்களை வெளியிட்டுள்ளது அந்த இணையதள பத்திரிகை. 

தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள தகவல்களின்படி காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் ஈவிஎம் இயந்திரத்தில் 12,14,086 வாக்குகள் பதிவாகி இருந்தன. ஆனால், 12,32,417 வாக்குகள் எண்ணப்பட்டன. அதாவது, 18,331 வாக்குகள் கூடுதலாக எப்படி வந்தன என்ற கேள்வி எழுகிறது. அதேபோல், தர்மபுரி தொகுதியில், ஈவிஎம் இயந்திரத்தில் 11,94,440 வாக்குகள் பதிவாகியிருந்தும்  12,12,311 வாக்குகள் எண்ணப்பட்டன. அதாவது, 17,871 வாக்குகள் கூடுதலாக இருந்துள்ளன. ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் ஈவிஎம் இயந்திரத்தில் 13,88,666 வாக்குகளும், எண்ணப்பட்டபோது 14,03,178 வாக்குகளும் இருந்தன. இதில், 14,512 வாக்குகள் கூடுதலாக இருந்தன. 

       

அதேபோல், உத்தரப் பிரதேசத்தில் மதுரா தொகுதியில் ஈவிஎம் இயந்திரத்தில் 10,88,206 வாக்குகள் பதிவாகியிருந்த போது சுமார் 10,98,112 வாக்குகளும் எண்ணப்பட்டன. அங்கு, 9,906 வாக்குகள் கூடுதலாக இருந்துள்ளன. இந்தத் தகவல்கள் அனைத்து தேர்தல் ஆணையத்தில் இருந்து எடுக்கப்பட்டதாக அந்தச் செய்தி கூறுகின்றது. இந்தத் தகவல்கள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் கேட்டதாகவும், ஆனால் தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க மறுத்துவிட்டதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close