[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

குடும்பத்தில் 9 பேர்.. பெற்றது 5 வாக்குகள் தானா..? கண்ணீர் விட்ட வேட்பாளர்..!

punjab-candidate-who-was-crestfallen-after-receiving-just-5-votes-initially-ends-up-with-856

வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, வேட்பாளர் ஒருவர் தான் பெற்றது வெறும் 5 வாக்குகள் என தெரிந்ததால் கண்ணீர் விட்டு அழுதார்.

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது பாஜக. தேர்தலில் சுயேச்சைகள், அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் என ஏராளமானோர் போட்டியிட்டனர். அப்படி, பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டவர்தான் நீது ஷட்டர்ன் வாலா. நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வந்த அவர், தான் பெற்றிருப்பது வெறும் 5 வாக்குகள் தான் என தெரிந்தும் கண்ணீர் விட்டு அழுதார். வீட்டில் 9 பேர் இருந்தும் தனக்கு 5 பேர் தான் மொத்தமாகவே வாக்களித்தார்களா என்ற வருத்தம்தான் நீதுவின் அந்த கண்ணீருக்கு காரணம். வீட்டில் உள்ளவர்களே தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் அவர் நினைத்தார். கேமரா முன்னிலையிலேயே கண்ணீர் மல்க அவர் தனது வருத்தத்தை கொட்டி தீர்த்துவிட்டார்.

ஆனால் நேரம் செல்ல செல்ல நீது பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை அதிகமானது. வாக்கு எண்ணிக்கை முடிவில் மொத்தமாக அவர் 856 வாக்குகள் பெற்றது தெரியவந்தது. அதேநேரத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் மோசடி நடந்துள்ளதாவும் நீது குற்றம்சாட்டினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close