[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நிலவின் சுற்றுவட்டப்பாதையை நெருங்குகிறது சந்திரயான் விண்கலம். காலை ஒன்பதரை மணியளவில் நிலவை சுற்றத் தொடங்கும் என இஸ்ரோ தகவல்
  • BREAKING-NEWS முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் 23ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் கோரிய மனு மீது டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

காங்கிரசை மறைமுகமாகவும் நேரடியாகவும் விமர்சித்த கங்கனா ரணாவத்

kangana-ranaut-says-we-were-earlier-slaves-of-italian-govt

நடிகை கங்கனா ரணாவத், காங்கிரஸ் கட்சியை மறைமுகமாகவும், நேரடியாகவும் விமர்சித்துள்ளார்

நாடாளுமன்றத் தேர்தலுக்கான நான்காம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.  பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். அத்துடன் பாலிவுட் நட்சத்திரங்களான பிரியங்கா சோப்ரா, கஜோல், அஜய் தேவகன், அமீர் கான், கரீனா கபூர், மாதூரி தீக்ஷித், கங்கனா ரனாவத், சோனாலி பிந்த்ரே உள்ளிட்ட பலரும் தங்கள் வாக்கினை அளித்தனர்.

வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை கங்கனா ரணாவத், காங்கிரஸ் கட்சியை மறைமுகமாகவும், நேரடியாகவும் விமர்சித்தார். காங்கிரசின் ஆட்சி நாட்டை வறுமையில் மட்டுமே வைத்திருந்ததாக சாடினார். மேலும் பொதுமக்கள் இந்தியாவின் சுதந்திரத்துக்காக வாக்களிக்க வேண்டுமென தெரிவித்தார். 

மேலும் பேசிய அவர், இன்றைய காலக்கட்டத்தில் தான் இந்தியா சுதந்திரமாக இருப்பதாக உணர்கிறேன். முன்னர் நாமெல்லாம் ஆங்கிலேயர்களிடமும், இத்தாலி அரசிடமும் அடிமையாக இருந்தோம் என தெரிவித்தார். மேலும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தவரை நாம் இதுவரை பார்த்திராத வறுமையும், மாசும் நாட்டை பீடித்திருந்ததாகவும் தெரிவித்தார்

கங்கனா பேசும்போது இத்தாலி அரசு என்ற வார்த்தையை பயன்படுத்தி, சோனியா காந்தியையும், காங்கிரஸ் கட்சியையும் மறைமுகமாக குறிப்பிட்டு விமர்சித்துள்ளார் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடியின் தலைமை பண்பினால் ஈர்க்கப்பட்டு சமீப காலமாக மோடிக்கு ஆதரவாக பேசி வரும் கங்கனா, அரசியல் கருத்துகளை அழுத்தமாக பதிவு செய்து வருகிறார். 

கங்கனா இதுவரை 3 முறை தேசிய விருதுகளை பெற்றுள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா நடிக்கவுள்ளார்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close