[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது
  • BREAKING-NEWS வயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்
  • BREAKING-NEWS மேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை
  • BREAKING-NEWS சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை
  • BREAKING-NEWS தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு
  • BREAKING-NEWS தமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்

நிஜ துப்பாக்கி மூலம் டிக் டாக் - துப்பாக்கி வெடித்ததில் இளைஞர் பலி!

delhi-teen-shot-dead-as-pistol-goes-off-while-filming-tiktok-video-after-visit-to-india-gate

டெல்லியில் 19 வயது இளைஞரும் அவரது நண்பர்கள் இருவரும் நாட்டுத்துப்பாக்கியை வைத்து டிக் டாக் வீடியோ செய்யும் போது துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இளைஞர் உயிரிழந்தார். 

வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்று ‘டிக் டாக்’ செயலியை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இளைஞர்கள் என்று மட்டும் இல்லாமல் வயது வித்தியாசங்களை தாண்டி இந்தச் செயலிகளுக்கான வாடிக்கையாளர்கள் கோடிக்கணக்கில் உள்ளனர். ஒரு பாடலையோ, இசையையோ, அல்லது வசனத்தையோ பின்னால் ஓடவிட்டு அதற்கு ஏற்ப நடனமாடுவது, வசனம் பேசுவது, நடித்து காட்டுவது போன்றவற்றை இந்தச் செயலி மூலம் செய்யலாம்.  டிக் டாக் வீடியோ செய்யும் போது கவனம் சிதறி அவ்வப்போது விபத்துகளும் நடக்கின்றன.

டெல்லியில் 19 வயது இளைஞரும் அவரது நண்பரும் நாட்டுத்துப்பாக்கியை வைத்து டிக் டாக் வீடியோ செய்யும் போது துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இளைஞர் உயிரிழந்தார். நேற்று இரவு சல்மான் என்ற இளைஞரும், அவரது நண்பர்கள் 2 பேரும் காரில் இந்தியா கேட் பகுதியை பார்வையிட சென்றுள்ளனர். பார்வையிட்டுவிட்டு திரும்பி வருகையில் காரில் அமர்ந்தபடியே டிக் டாக் வீடியோ செய்துள்ளனர். 

தங்களிடம் இருந்த நாட்டுத்துப்பாக்கியை கையில் வைத்துக்கொண்டு சல்மானை நோக்கி அவரது நண்பர் டிக் டாக் வீடியோவுக்காக சுடுவது போல நடித்துள்ளார். ஆனால் துப்பாக்கி தவறுதலாக வெடித்து சல்மான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உடனடியாக செய்வதறியாமல் சல்மானின் உறவினர் வீட்டுக்குச் சென்ற நண்பர்கள் உறவினர்களிடம் நடந்ததைக் கூறிவிட்டு மருத்துவமனைக்கு சல்மானை தூக்கிச் சென்றுள்ளனர். ஆனால் சல்மான் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் டிக் டாக் வீடியோ எடுத்த சல்மானின் நண்பர்கள் இருவரையும், ரத்தக்கறையான ஆடையை மாற்ற உதவிய மற்றொரு நண்பர் என மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close