[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மாநகரத்தின் அரசியல் மற்றும் கலாசார வரலாற்றை பற்றி பல புத்தகங்களை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான எஸ்.முத்தையா காலமானார்
  • BREAKING-NEWS பிரதமர் மோடி பற்றி 5 பகுதிகளை கொண்ட Modi-Journey of a Common Man என்ற வெப் சீரிஸ் தொடரை நிறுத்த ஈராஸ் நவ் நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS 4 தொகுதி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தை மே 1ம் தேதி ஒட்டப்பிடாரத்தில்(தனி) தொடங்குகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ராகுல் காந்திக்கு ஆதரவாக கேரள மாநிலம் வயநாட்டின் மானந்தவாடி பகுதியில் இன்று பிரியங்கா காந்தி வதேரா வாக்கு சேகரிப்பு
  • BREAKING-NEWS பொன்னமராவதி சம்பவத்தால் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவு
  • BREAKING-NEWS புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு
  • BREAKING-NEWS 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக

''பட்ட மேற்படிப்பு படிக்காமலேயே எம்.ஃபில் பட்டத்தை பெற்றவர் ராகுல்காந்தி'' - அருண்ஜெட்லி

he-got-mphil-without-masters-says-arun-jaitley-on-rahul-gandhi-s-education

பட்ட மேற்படிப்பு படிக்காமலேயே எம்.ஃபில் பட்டத்தை பெற்றவர் ராகுல்காந்தி என அருண்ஜெட்லி விமர்சனம் செய்துள்ளார்.

மத்திய ஜவுளித்துறை அமைச்சரும், பாஜக நிர்வாகியும் ஆன ஸ்மிரிதி இரானி, இந்த மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து அவர் களமிறக்கப்பட்டுள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டும் அவர் ராகுல் காந்திக்கு எதிராக இதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். கடந்த தேர்தலின் போது ஸ்மிரிதி தெரிவித்த கல்வித்தகுதி பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. 

ஸ்மிரிதி இளங்கலை படிப்பை முடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் காங்கிரஸ் கட்சியினர் வைத்திருந்தனர். இந்நிலையில் எதிர்வரும் தேர்தலுக்காக அமேதி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள ஸ்மிரிதி, பி.காம் படிப்பை மூன்று ஆண்டுகள் முடிக்கவில்லை என தெளிவாக குறிப்பிட்டார்.

ஸ்மிரிதி ரானியின் கல்வித்தகுதி குறித்து காங்கிரஸ் கட்சி தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது. இந்நிலையில் ஸ்மிரிதி ரானிக்கு ஆதரவாக மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அருண்ஜெட்லி குரல் கொடுத்துள்ளார். 

இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ''பாஜக வேட்பாளர்களின் கல்வித்தகுதியில் தொடர்ந்து கவனம் செலுத்துபவர்கள் ராகுல்காந்தியின் கல்வித்தகுதியை கவனிப்பதில்லை. 

ராகுலின் கல்வித்தகுதி குறித்து ஏராளமான கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியுள்ளது. ராகுல்காந்தி பட்ட மேற்படிப்பு படிக்காமலேயே எம்.ஃபில் பட்டத்தை பெற்றவர்’’ என்றும் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி அமெரிக்காவின் ப்ளோரிடாவில் உள்ள ரோலின்ஸ் கல்லூரியில் பி.ஏ பட்ட படிப்பை 1994ம் ஆண்டு முடித்தார். பின்னர், 1995ம் ஆண்டு இங்கிலாந்தின் கேம்பிரிட்ச் பல்கலைக் கழகத்தின் கீழ் உள்ள ட்ரினிடி கல்லூரியில் எம்.ஃபில் படித்தார். ராகுல் எம்.ஃபில் படித்தது தொடர்பாக சர்ச்சை எழுந்த போது, 1994-95ம் ஆண்டில் ராகுல் எம்.ஃபில் படித்ததை கேம்பிரிட்ச் பல்கலைக்கழகம் 2014இல் உறுதி செய்தது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close