[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காரைக்குடியில் அனுமதியின்றி தேர்தல் அலுவலகம் திறந்த புகாரில், சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி மீது காரைக்குடி போலீசார் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS ஓபிஎஸ் மகன் அதிமுகவிற்காக பல ஆண்டுகளாக உழைத்து வருகிறார்; அதனால் அவரை வேட்பாளராக அறிவித்ததில் எந்த தவறும் இல்லை - அமைச்சர் கே.சி.வீரமணி
  • BREAKING-NEWS நெதர்லாந்து நாட்டின் உட்ரெச் நகரில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்
  • BREAKING-NEWS நேர்காணலுக்கு கூட வராமல், தான் தேர்தலில் போட்டியிடுவதாக சி.கே.குமரவேல் அறிவித்தது கட்சி கட்டுப்பாடுகளுக்கு முரணான செயல் - ஜனநாயக முறைப்படி நடைபெற்ற வேட்பாளர் தேர்வுமுறைக்கு எதிராக செயல்பட்டதால் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை அவரின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்கிறது
  • BREAKING-NEWS கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயான், மனோஜ் உட்பட 10பேரை மார்ச் 27ல் மீண்டும் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உதகை நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.52 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.87 காசுகளாகவும் விலை நிர்ணயம்

அயோத்தி பிரச்னையை மத்தியஸ்தர்கள் மூலம் தீர்க்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

supreme-court-refers-ayodhya-land-dispute-for-mediation

அயோத்தி நிலப் பிரச்னையை மத்தியஸ்தர்கள் மூலம் தீர்க்க, உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தமானது என்பது தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதி மன்றம், சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 தரப்பினரும் சமமாகப் பிரித்துக்கொள்ள 2010-ம் ஆண்டு தீர்ப்ப ளித்தது. இதை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந் நிலையில், இந்த வழக்கில் மத்தியஸ்தர்கள் மூலம் தீர்வு காண வழி உண்டா என்ற கேள்வியை உச்சநீதிமன்றம் எழுப்பியது. மத்தியஸ்தம் மூலம் தீர்வு காண, நிர்மோகி அகாரா தவிர்த்த இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. முஸ்லிம் அமைப்புகள் ஏற்கின்றன. இதைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட தரப்புகள், யாரை மத்‌தியஸ்தராக நியமிக்கலாம் என நீதிமன்றத்துக்கு பரிந்துரைக்கலாம் எனவும் மத்தியஸ்தத்திற்கு உத்தரவிடுவது குறித்த தீர்ப்பை இன்று அறிவிப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

அதன்படி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, இந்தப் பிரச்னை யை மத்தியஸ்தர்கள் மூலம் தீர்க்க இன்று உத்தரவிட்டுள்ளது. 

மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி கலிபுல்லா தலைமையிலான மத்தியஸ்தர் குழுவையும் நியமித்தது. அதில், வாழும் கலை அமைப்பின் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்கறிஞசர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழு ஒரு வாரத்தில் தொடங்கி, 8 வாரத்தில் பேசி முடிக்க வேண்டும். சமரச பேச்சுவார்த்தை விவரங்களை ஊடகங்கள் வெளியிடக் கூடாது. அதற்கு தடை விதிக்கப்படுகிறது என்று அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டது.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close