[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா மாநிலத்தின் காங்கிரஸ் எம்எல்ஏக்களை கடத்தியதால்தான் பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு பன்றிக்காய்ச்சல் வந்தது - பி.கே.ஹரிபிரசாத்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.23 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு
  • BREAKING-NEWS வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS பத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு - பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS திருச்சி: மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 71பேர் காயம்

சபரிமலையில் பத்திரிகையாளர்களுக்கு தற்காலிகத் தடை

suspended-journalists-in-sabarimala

சபரிமலையில் செய்தி சேகரிக்க செல்லும் பத்திரிகையாளர்களுக்கு தற்காலிகத் தடை விதித்து டிஜிபி லோக்நாத் பெஹெரா உத்தரவிட்டுள்ளார். 

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் அண்மையில் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இதனால் மாநிலம் முழுவதும் போராட்டம் வெடித்தது. ஆகவே அப்பகுதிகளில் ஏராளமான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. 

உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து ரெஹானா பாத்திமா என்ற பெண் பத்திரிகையாளரும் கவிதா என்ற மற்றொரு பெண்ணும் இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலை கோயிலுக்குள் செல்ல முயன்றனர். அப்போது எதிர்ப்பு வலுக்கவே சன்னிதானம் வரை சென்று மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனிடையே இந்து அமைப்புகளின் போராட்டம் முற்றியதையடுத்து போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

இதைத்தொடர்ந்து ஐப்பசி மாத பூஜை நிறைவடைந்ததையடுத்து சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை மூடப்பட்டது. இந்நிலையில் மண்டல பூஜைக்காக நாளை மீண்டும் நடை திறக்கப்பட உள்ளது. இதனால் பம்பை, நிலக்கல், சன்னிதானம் மற்றும் இலவுங்கல் ஆகிய பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் நவம்பர் 6-ஆம் தேதி நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே விஸ்வ இந்து பரிஷத் மற்றும் இந்து ஐக்யவேதி உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகளின் கூட்டு தளமான சபரிமலை கர்மா சமிதி பத்திரிகை நிறுவனத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியது. அதில், சபரிமலை நடைதிறப்பின்போது செய்தி சேகரிக்க பெண் பத்திரிகையாளர்களை அனுப்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது.  

நேற்று சபரிமலை செல்லும் வழியான நிலக்கல்லில் ஊடகவியலாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். அதைத்தொடர்ந்து இன்று இலவுங்கல் பகுதியில் பத்திரிகையாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சபரிமலையில் செய்தி சேகரிக்க செல்லும் பத்திரிகையாளர்களுக்கு தற்காலிகத் தடை விதித்து டிஜிபி லோக்நாத் பெஹெரா உத்தரவிட்டுள்ளார். 
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பெஹெரா, பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அவை முடிந்தவுடன் பத்திரிகையாளர்கள் தங்கள் பணியை செய்ய அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.

பத்திரிகையாளர்களின் பாதுகாப்புக்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த முறை பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதன் மூலம் நிறைய விமர்சனங்களை சந்திக்க வேண்டியிருந்தாகவும் குறிப்பிட்டார். நாங்கள் எந்த முடிவு எடுத்தாலும் அது பத்திரிகையாளர்களையும் பொதுமக்களையும் பாதுகாக்கவே எனவும் பத்திரிகையாளர்களின் சுதந்திரத்தை தடுக்கவில்லை எனவும் தெரிவித்தார். 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close