[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்திய ஜே.என்.யூ. மாணவர்கள் மீது தடியடி
  • BREAKING-NEWS தமிழக ஆளுநரின் செயலாளராக இருந்த ஆர்.ராஜகோபால் தலைமை தகவல் ஆணையராக நியமனம்
  • BREAKING-NEWS சியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி

மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் கோடீஸ்வரம்மா மறைவு 

revolutionary-communist-leader-kondapalli-koteswaramma-passes-away

புரட்சிகர கம்யூனிஸ்ட் தலைவர் கொண்டபள்ளி கோடீஸ்வரம்மா தனது 99வது வயதில் காலமானார். சமீபத்தில்தான் கோடீஸ்வரம்மா தனது 100வது பிறந்தநாளை கொண்டாடினார். சுதந்திர போராட்ட வீராங்கனை, மூத்த கம்யூனிஸ்ட் தலைவர், எழுத்தாளர், பெண்ணியவாதி என கோடீஸ்வரம்மா பன்முகத் தன்மை கொண்டவர். 

ஆந்திர மாநிலம் பமர்ரு அப்குதியில் 1920ம் ஆண்டு பிறந்தவர் கோடீஸ்வரம்மா. தனது 4 வயதில் இவருக்கு பால்ய திருமணம் நடந்தது. அவரது மாமாவையே அவருக்கு திருமணம் செய்து வைத்தனர். ஆனால், திருமணமான இரண்டே வருடங்களில் தனது கணவர் இறந்துவிட சிறு வயதிலேயே விதவைக் கோலம் பூண்டார். அப்போது சமூகத்தில் தாங்க முடியாத கொடுமைகளை அனுபவித்தார். 

தனது 10 வயதிலேயே கோடீஸ்வரம்மா சுதந்திர போராட்டங்களில் கலந்து கொண்டார். பல்வேறு கூட்டங்களில் சுதந்திர போராட்ட பாடல்களை அவர் பாடினார். 18 வயதில் பிரபல கம்யூனிஸ்ட் தலைவர் கொண்டபள்ளி சீதராமையா என்பவரை அவர் திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் அவரது வாழ்க்கை மாறியது. கோடீஸ்வரம்மாவும் குடிவாடா பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சிக்காக பணியாற்றினார். கம்யூனிஸ்ட் கட்சியின் பெண்கள் அமைப்பில் பல்வேறு பணிகளை செய்தார். சில சமயங்களில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தும் அவர் கட்சிப் பணிகளை மேற்கொண்டார். 

      

பின்னர் தனது 35வது வயதில் படிப்பை தொடர்ந்தார். படிப்பை முடித்து கதைகள் எழுதினார். ரேடியோவில் பணியாற்றினார். தன்னுடைய வருமானத்தில் கட்சிக்கு தொடர்ந்து பணம் அனுப்பி வந்தார். தனது மகள், மகனை நன்றாக படிக்க வைத்தார். கம்யூனிஸ்ட் அரசியலில் முழு வீச்சில் இருந்த தனது கணவர் சீதராமையாவுக்கு தொடர்ந்து உதவினார். தன்னுடைய கணவர் 87 வயதில் இறந்துவிடவே அவர் ஐதராபாத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் தனது கடைசி நாட்களை கழித்தார். இந்நிலையில் அவர் உடல் நலக் குறைவால் இன்று காலமானார். கடந்த சில வாரங்களாகவே அவர் மூளை இரத்த அழுத்த பிரச்னையால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

கோடீஸ்வரம்மா பெண்கள் சார்ந்த பல்வேறு பிரச்னைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளார். இதற்காக பல்வேறு நீதிப் போராட்டங்களையும் அவர் நடத்தினார். விளிம்புநிலை மக்களின் பிரச்னைகளுக்காக போராடினார். கோடீஸ்வரம்மா மொத்தம் 4 புத்தகங்களை எழுதியுள்ளார். அதில் ‘நிர்ஜனா வரதா’என்ற அவரது சுயசரிதை புத்தகமும் ஒன்று. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close