[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் தர விருப்பம் இல்லாத விவசாயிகளை துன்புறுத்தக்கூடாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிஷப் பிராங்கோ பணியிடை நீக்கம் - வாடிகன் நிர்வாகம்
  • BREAKING-NEWS மொஹரம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளுக்கு நாளை அரசு பொது விடுமுறை - புதுச்சேரி அரசு
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிப்பு

’மாடு எனக்கே சொந்தம்’: வெள்ளத்தில் தப்பிய மாட்டுக்கு சொந்தம் கொண்டாடிய 5 பேர்!

queer-squabble-over-a-rescued-cow-with-5-five-people-in-kerala

கேரளாவில் வெள்ளத்தில் தப்பி வந்த மாடு ஒன்றை 5 பேர் சொந்தம் கொண்டாடியதால், பஞ்சாயத்து பேசியவர்கள் தலையை பிய்த்துக் கொண்டனர்.

கேரளாவில் கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாகவும் நிலச்சரிவு காரணமாகவும் ஏராளமானோர் தங்கள் வீடுகளை, உடைமை களை இழந்துள்ளனர். அவர்களுக்கு உதவ பலரும் முன் வந்துள்ளனர். நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அங்கு இயல்பு வாழ்க்கை மெதுவாக திரும்பி வருகிறது. இந்நிலையில் எர்ணாகுளம் அருகே வெள்ளத்தில் தப்பிய மாட்டுக்கு 5 பேர் உரிமை கொண்டாடிய ருசிகர சம்பவம் நடந்துள்ளது.

எர்ணாகுளம் அருகே உள்ள சிறு கிராமம் மேக்கடம்பு. வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட பசுமாடு ஒன்று இந்த ஊரில் அலைந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த ஒருவர், மாட்டைக் காப்பாற்றி வீட்டுக்கு கொண்டு போனார். இந்நிலையில் மற்றொருவர், ’அந்த மாட்டை நான் தான் பார்த்தேன். என் வீட்டுக்கு கொண்டு வரலாம்னு நினைச்சேன். அதுக்குள்ள நீ எப்படி கொண்டு போகலாம்?’ எனச் சண்டைக்கு வந்தார். இந்த பஞ்சாயத்து உள்ளூரில் நடந்து கொண்டிருக்க, வெளியூர்க்காரர் ஒருவர் மேக்கடம்புக்கு வந்தார். 

தொழுவில் இந்த மாட்டைப் பார்த்ததும் ,’அட ஆண்டவா... உன்னைய எங்கலாம் தேடுதேன். நீ இங்கயா இருக்கே?’ என்று மாட்டைக் கட்டி பிடித்தார். மாட்டை தொழுவில் கட்டிப்போட்டிருந்தவர் ஆச்சரியமடைந்தார். அவருடன் சண்டைக்குப் போனார். இந்தப் பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்க, இன்னும் இரண்டு பேர் இதே போல வந்தனர். 

அவர்களில் ஒருவர் மாட்டைப் பார்த்ததும் கண்ணீர் விட்டார். ‘என் பசு கிடைச்சுடுச்சு’ என்று அவர் அழுது துடிக்க, இப்போது மேலும் சிக்கல். ’ரொம்ப அழுதாரே, இவர்தான் உண்மையான ஓனரா இருப்பாரோ?’ என்று அங்கிருந்தவர்கள் நினைத்தனர். இதற்கிடையே இன்னொருவரும், ’அது என்னோட மாடுல்லா’ என்று வந்துவிட்டார்.

தனக்கு ஐந்து பேர் சொந்தம் கொண்டாடுவதை அறியாத அந்த பசுமாடு, ஜாலியாகப் புற்களை மேய்ந்து கொண்டிருந்தது.

அப்போது உள்ளூரைச் சேர்ந்த ஹோமியோபதி டாக்டர் ஒருவர் வந்தார். மாட்டின் காதில் இன்சூரன்ஸ் முத்திரை குத்தப்பட்டிருப்பதைப் பார்த்தார். ’உண்மையான ஓனரை கண்டுபிடிச்சாச்சு. சும்மா இருங்கய்யா?’ என்ற அவர் அதில் இருந்த எண்ணை பார்த்தார். பிறகு சம்மந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனத்தில் விசாரிக்கப்பட்டது. உண்மையான ஓனர் கண்டுபிடிக்கப்பட்டார்.

இதை அறிந்ததும் சொந்தம் கொண்டாடிய அந்த 5 பேரும் சத்தம் போடாமல் அங்கிருந்து நகர்ந்துவிட்டனர். அதிலும் கண்ணீர்விட்டு கதறி தத்ரூபமாக து(ந)டித்த அந்த நபரைதான் எல்லோரும் தேடினர். அவர்தான் முதலில் எஸ்கேப் ஆகியிருந்தார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close