[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை, கடலூர், நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.48 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.10 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் லஞ்ச புகாரில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளரின் வங்கி லாக்கரில் ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு
  • BREAKING-NEWS ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை - அப்போலோ தரப்

29 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை, கருக்கலைப்பு ! பீகார் விடுதியின் திடுக்கிடும் தகவல்கள்

bihar-shelter-home-forced-girls-to-go-for-abortion

பீகார் மாநிலம் முசாபர்பூரில் அரசின் நிதியுதவியில் இயங்கும் தங்கும் விடுதி ஒன்றில் 44 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து அந்த விடுதியில் தங்கியிருந்த 44 சிறுமிகளில் 21 பேரை முதல் கட்டமாக மருத்துவமனை சோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் 16 பேரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பதாக தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து விடுதியில் மீதம் இருக்கும் சிறுமிகளை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்ப முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்போது மொத்தம் 29 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும், பல சிறுமிகளை கருக்கலைப்பு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பீகார் விடுதியில் இருப்பவர்களால் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமிகளில் சிலருக்கு கரு உருவாகியுள்ளது. இதனையறிந்த விடுதி நிர்வாகம் பல சிறுமிகளுக்கு கருக்கலைப்பும் செய்துள்ளது. 

(இதையும் படிக்கலாம் இதுவரை 16 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை ! இன்னும் எத்தனையோ ? கவலையில் பீகார் போலீஸ் )

இவ்விவகாரத்தில் மீதமுள்ள சிறுமிகள் குறித்தும் மருத்துவ பரிசோதனை அறிக்கை வரவுள்ளது. இதனால் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான சிறுமிகளின் பட்டியல் அதிகரிக்கும் என போலீஸார் தெரிவிக்கின்றனர். மேலும் முசாபர்பூரில் உள்ள இல்லத்தில் ஏற்கெனவே இருந்தவர்களின் விவரமும் கேட்டக்கப்பட்டுள்ளதாக இவ்வழக்கை விசாரணை செய்யும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் திடுக்கிடும் திருப்பபமாக, ஒரு சிறுமி கொலை செய்யப்பட்டு வளாகத்தில் நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ளதாக, சிறுமிகள் போலீஸாரிடம் புகார் தெரிவித்திருந்தனர். 

இதைத் தொடர்ந்து போலீசார் அரசு விடுதியின் வளாகத்தில் தோண்டும் பணி நடைபெற்றுவருகிறது. இந்தப் பணிகள் எக்ஸிக்யூடிவ் மேஜிஸ்ட்ரேட் ப்ரியா ராணி குப்தா மற்றும் மூத்த போலீஸ் அதிகாரிகளின் முன்னிலையில் இந்தப் பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை இந்த விவகாரத்தில் அந்த விடுதியை சேர்ந்த 10 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இந்தக் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் தப்பிக்க முடியாது என்று முஸாப்புர் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் ஹர்ப்ரீத் கவுர் தெரிவித்துள்ளார்.

மேலும், விடுதியின் சிறுமி கூறியதை அடுத்து புதைக்கப்பட்ட இடத்தை தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. இன்னும் சில அடிகள் தோண்டும் பணி தொடர்ந்து நடைபெறும் என்றும் கூறியுள்ளார் ஹர்ப்ரீத் கவுர். பீகார் முழுவதும் இப்போது அந்த விடுதிக்கு எதிரான போராட்டமும் நியாயமான விசாரணை வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close