[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்
  • BREAKING-NEWS காவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

திருப்பதி கும்பாபிஷேகம் போறீங்களா ?

thirumala-devasthanam-board-announced-few-changes

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறும் 6 நாட்களுக்கு நேரடியாக திருமலைக்கு வரும் பக்தர்கள் வைகுண்டம் காத்திருப்பு  வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது

திருப்பதி ஏழுமலையான் கோவிலின் அறங்காவலர் குழு கூட்டம் திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் தலைவர் புட்டா சுதாகர் யாதவ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செயல் அலுவலர் அணில்குமார் சிங்கால் “ திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் 11ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெறக்கூடிய மகா சம்ப்ரோக்ஷண கும்பாபிஷேகத்திற்கு பக்தர்களிடமிருந்து ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை கேட்கப்பட்டது. இதில் 30 முதல் 35 சதவீதம் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் விதமாக வைக்க வேண்டும் எனவும் 22 சதவீதம் பக்தர்கள் தரிசனமே வேண்டாம் தேவஸ்தானம் முன்பு அறிவித்தது  நல்ல முடிவு எனவும் மீதமுள்ள பக்தர்கள் நேரடியாக திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு தரிசனம் செய்து வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர் என கூறினார்

மேலும் பேசிய அவர் “பலரின் கோரிக்கையினை ஏற்று  இந்த ஆறு நாட்களுக்கு எத்தனை மணி நேரம் தரிசனத்திற்கு கால அவகாசம் உள்ளதோ அதற்கேற்ப அனைத்து பக்தர்களையும் வைகுண்டம் வழியாக அனுமதிக்கப்பட்டு தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.  இந்த ஆறு நாட்களுக்கு ஏற்கனவே விஐபி தரிசனம், அறங்காவலர் குழு உறுப்பினர்களுக்கான தரிசனம், 300 ரூபாய் தரிசனம், மலைப்பாதையில் வரும் பக்தர்களுக்கான திவ்ய தரிசனம் உள்ளிட்ட  ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் என அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே கும்பாபிஷேகம் நடைபெறும் போது நேரடியாக திருமலைக்கு வந்து வைகுண்டம் வழியாக மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர் என அவர் தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close