[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் தர விருப்பம் இல்லாத விவசாயிகளை துன்புறுத்தக்கூடாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிஷப் பிராங்கோ பணியிடை நீக்கம் - வாடிகன் நிர்வாகம்
  • BREAKING-NEWS மொஹரம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளுக்கு நாளை அரசு பொது விடுமுறை - புதுச்சேரி அரசு
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிப்பு

நீ நண்பனா நம்பிக்கை துரோகியா ? குத்திக்கொன்ற தோழன்

man-kills-friend-for-peeping-in-on-mom

தாய் குளிப்பதை எட்டிப்பார்த்த நண்பனை சரமாரிக் குத்திக்கொன்ற தோழன் கைது செய்யப்பட்டுள்ளான்.

ஐதராபாத் புறநகர் பகுதியில் உள்ள லிங்கம்பள்ளியைச் சேர்ந்தவர் சம்பத். அதே பகுதியை சேர்ந்தவர் அஜய் தேவராஜ் (20). இருவரும் நண்பர் கள். அடிக்கடி சம்பத் வீட்டுக்கு வருவார் அஜய். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மூன்று மணியளவில் அஜய்யை அழைத்த சம்பத், தண்ணியடிக்கலாம் என்று கூறியிருக்கிறார். இருவரும் மது வாங்கிக்கொண்டு தாரா நகரில் உள்ள டிரேட் சென்டர் அருகே சாலை யோரத்தில் அமர்ந்து மதுகுடித்தனர். 

அப்போது தனது நண்பர்கள் சிலரையும் அழைத்துள்ளார் சம்பத். அனைவரும் மதுகுடித்துக்கொண்டிருந்தபோது, திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அஜய்யை சரமாரியாகக் குத்தினார் சம்பத். பின்னர் கழுத்தையும் அறுத்தார். இதையடுத்து ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார் அஜய். இதைக் கேள்விபட்டு விரைந்து வந்த அஜய்யின் சகோதரன் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் அஜய்யை குத்திக்கொன்ற சம்பத் சந்தாநகர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். போலீசாரிடம், ‘அடிக்கடி வீட்டும் வரும் அஜய், எனது அம்மா குளிப்பதை கடந்த மாதம் ஒளிந்திருந்து பார்த்தான். சில முறை இது தொடர்ந்து நடந்ததால் என்னால் பொறுத்துக் கொள் ள முடியவில்லை. நண்பன் என்றாலும் அவனை கொல்ல முடிவு செய்தேன். அதன்படி நண்ர்களுடன் சேர்ந்து கொன்றேன்’ என்று கூறியுள் ளார்.

ஆனால் போலீசார் வேறு கோணத்திலும் இதை விசாரித்து வருகின்றனர். அஜய் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும் அதை விரும்பாத அந்த பெண்ணின் குடும்பத்தினர் சம்பத் மூலம் அஜய்யை கொன்றிருக்கலாம் என்றும் சந்தேகப்படுகின்றனர். இதுபற்றி விசாரணை மேலும் நடந்துவருகிறது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close