[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.53 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS பணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ
  • BREAKING-NEWS பாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை
  • BREAKING-NEWS நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா!
  • BREAKING-NEWS பெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது! - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்

கர்நாடகாவில் 166 கோடி பறிமுதல்

166-crore-seized-in-karnataka

கர்நாடகா மாநிலத்தில் தேர்தலையொட்டி இதுவரை 166 கோடி ரூபாய் பிடிபட்டுள்ளதாக டிஜிபி நீலாமணி ராஜூ தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அனல் பறக்கும் பரப்புரை நேற்று மாலையுடன் ஓய்ந்தது. ஜெய்நகர் தொகுதியில் பாரதிய ஜனதா வேட்பாளர் விஜயகுமார் மரணமடைந்ததால், அங்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 223 தொகுதிகளில் நாளை தேர்தல் நடைபெறவிருக்கிறது. நாளை நடைபெறவிருக்கும் வாக்குப்பதிவுக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் பெங்கரூரூவில் செய்தியாளர்களை சந்தித்த டிஜிபி நீலாமணி ராஜூ, 20 சதவிகித வாக்குச்சாவடிகள் பதட்டமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு பணிகளுக்காக 82 ஆயிரத்து 157 போலீசார், ஊர்காவல்படையினர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

மேலும் 585 கம்பெனி மத்தியப் பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தா‌ர். தேர்தலையொட்டி ரோந்துபணியில் ஈடுபட்ட போது 166 கோடி ரூபாய் ரொக்கமும், மது பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பரிசுப்பொருட்களும் பிடிபட்டுள்ளன. தேர்தலுக்காக 92 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உரிமம் பெற்ற ஆயுதங்கள் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் டிஜிபி நீலாமணி ராஜூ தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : Karnataka166 croreSeizedNeelamani raju
Advertisement:
Advertisement:
[X] Close