[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை
  • BREAKING-NEWS கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை
  • BREAKING-NEWS காஷ்மீருக்கு இன்று சென்று பார்வையிட ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் திட்டம். கட்டுப்பாடுகளை மீறி வர வேண்டாம் என ஜம்மு காஷ்மீர் அரசு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்

விமானப்படை முன்னாள் தளபதி தியாகிக்கு அமலாக்கத்துறை சம்மன்

agustawestland-deal-ed-summons-former-iaf-chief-sp-tyagi-on-may-5

விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி. தியாகிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேடு விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அதில் தொடர்புடையதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள விமானப்படை முன்னாள் தளபதி எஸ்பி தியாகியிடம் சிபிஐ அதிகாரிகள் இன்று இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேட்டில் தொடர்புடைய, சட்டவிரோத ப‌ணப்பரிமாற்ற விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு வருமாறு தியாகிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

நாளை மறுநாள் நேரில் ஆஜராகுமாறும் படி அதில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய தியாகியின் ஒன்றுவிட்ட சகோதரர்களை வரும் 6-ஆம் தேதி ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close