[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி பேட்டிங்
  • BREAKING-NEWS அவசியம் இருந்தால் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: புக்கத்துறையில் கனிஷ்க் கோல்டு நிறுவனத்தின் ரூ.48 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை
  • BREAKING-NEWS கிராம பஞ்சாயத்து ஊற்று போன்றது; கவனமின்றி இருந்ததால் சாக்கடை கலந்துவிட்டது - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS கூட்டு தேடி அலைய வேண்டிய நிலையில் அதிமுக எப்போதும் இல்லை- நமது அம்மா நாளிதழ்
  • BREAKING-NEWS ஐபிஎல் கிரிக்கெட்: டெல்லி அணிக்கு 144 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் அணி
  • BREAKING-NEWS மே 2ஆம் தேதி டெல்லி செல்கிறார் தமிழக முதலமைச்சர் பழனிசாமி

8 பேர் நடத்திய கொடூரம்: சிறுமி ‘ஆசிபா’வுக்கு நீதி கேட்கும் ஒட்டுமொத்த இந்தியா..!

8-year-old-child-raped-in-jk

ஜம்மு காஷ்மீரில் 8 வயது சிறுமி காவல்துறையினர் உட்பட எட்டு பேரால் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நாடு முழுவதும் கண்டனக்குரல்கள் எழுந்துள்ளன. சிறுமி ‘ஆசிபா’வுக்கு நீதி கேட்டு #JusticeforAsifa என்கிற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டாகி வருகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தை சேர்ந்த எட்டு‌வயது சிறுமி ஆசிபா. கடந்த ஜனவரி 10-ஆம் தேதி காணாமல் போனாள். காணாமல் போய் ஒருவாரத்திற்குப் பிறகு ரஸானா வனப்பகுதியில் இருந்து சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக ஜம்மு காஷ்மீர் குற்றப்புலனாய்வுத்துறை நடத்திய விசாரணையில், ஒரு சிறுவன் உட்பட 8 பேர் சேர்ந்து சிறுமியை வழிபாட்டுத்தலம் ஒன்றில் மறைத்து வைத்து பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது தெரியவந்துள்ளது. சிறுமிக்கு உணவு கூட தராமல் மயக்கத்திலேயே வைத்திருந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சிறுமியை மயக்கத்தில் வைத்திருக்க பயன்படுத்திய மருந்தால், இதயம் மற்றும் நுரையீரல் செயலிழந்ததும் தெரியவந்துள்ளது.

முதலில் கடத்திச்சென்று பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த 18 வயது நிரம்பாத சிறுவனுடன் சேர்ந்து மேலும் 6 பேரும், விசாரணை நடத்தச்சென்ற காவல் அதிகாரி ஒருவரும் சிறுமிக்கு பாலியல் கொடூரத்தை நிகழ்த்தியுள்ளனர். மேலும் பாலியல் கொடூரக்குற்றம் வெளியே தெரியாமல் இருக்க ரத்தக்கறை படிந்த ஆடைகளையும் ஆதாரங்களையும் அழித்ததாக மேலும் இரு காவல்துறையினர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து துவைக்கப்பட்ட ஆடையில் உள்ள ரத்தக்கறை அடையாளங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் டெல்லி தடயவியல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக இரண்டு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. முக்கிய குற்றவாளியான 18 வயது நிரம்பாத சிறுவன், 8 வயது சிறுமியை அடித்துக்கொலை செய்ததும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. குற்றம்தொடர்பாக 130 சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

8 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமைக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் எழுந்துள்ளது. இத்தகைய குற்றம் புரிந்த குற்றவாளிகளை எப்படி யாரும் பாதுகாக்க முயல முடியும்..? என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மனித குலத்திற்கே‌ எதிரானவை என்று கண்டனம் தெரிவித்துள்ளார். அத்தகைய குற்றம் புரிந்தவர்களை நீதியின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ராகுல்காந்தி நேற்று நள்ளிரவு டெல்லியில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியும் நடத்தியுள்ளார்.

மனிதர்களாக நாம் தோல்வியடைந்துவிட்டோம் என்று வேதனை குரலை பதிவு செய்துள்ளார் மத்திய‌ அமைச்சர் விகே சிங். இதுதொடர்பான அவரது ட்விட்டர் பதிவில், நிச்சயம் அந்த சிறுமிக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நீதி நிலைநாட்டப்படும் என்று ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் மெகபூபா முஃப்தி, உறுதி அளித்துள்ளார்.

8 வயது சிறுமியை மனசாட்சியே இல்லாமல் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு கொலை செய்த குற்றவாளிகளுக்கு நிச்சயம் தூக்கு தண்டனைதான் வழங்க வேண்டும் என பொதுமக்கள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். நாட்டில் நடக்கும் சம்பவங்களை பார்த்தால் குழந்தைகளை வெளியே அனுப்பவதற்கு அவ்வளவு பயமாக உள்ளது என பலரும் தங்களது வேதனையையும் பதிவு செய்து வருகின்றனர். குற்றத்தில் ஈடுபட்ட போலீசாருக்கு மரண தண்டனையை விட அதிக தண்டனை ஒன்று இருந்தால் அதனை வழங்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

சமூகவலைத்தளவாசிகளும் சிறுமி ஆசிபாவுக்கு நீதி கேட்டு தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். ட்விட்டரிலும் #JusticeforAsifa என்கிற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. குற்றவாளிகளை கைது செய்தால் மட்டும் போதாது. அவர்களுக்கு விரைவில் தண்டனை பெற்றுத்தர வேணடும் எனவும் பலரும் தங்களது குரலை பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close