[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதுச்சேரியில் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்
  • BREAKING-NEWS காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அக்.2இல் சென்னையில் டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு
  • BREAKING-NEWS எம்எல்ஏ கருணாஸை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுத்தது எழும்பூர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆதார் அடையாள அட்டை செல்லும் - உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் செப்டம்பர் 28 முதல் 30ம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது

கால்வாயில் டிராக்டர் கவிழ்ந்து, 12 கூலித் தொழிலாளர்கள் பலி: அதிகாலையில் பரிதாபம்!

12-farmworkers-die-as-tractor-plunges-into-a-canal-in-telangana

கால்வாயில் டிராக்டர் கவிழ்ந்து விழுந்த விபத்தில் கூலித் தொழிலாளர்கள் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தெலங்கானா மாநிலம் நல்கொண்டாவில் உள்ள படமட்டி தண்டா என்ற கிராமத்தில் இருந்து புளிசெர்லா என்ற பகுதிக்கு டிராக்டர் ஒன்று சென்றுகொண்டிருந்தது. டிராக்டரில் ஏராளமான பெண்கள் உட்பட சுமார் 30-க்கும் மேற்பட்டவர்கள் இருந் தனர். அனைவரும் கூலித் தொழிலாளர்கள். டிராக்டர் வட்டிபாட்லா என்ற இடத்துக்கு அருகே வந்தபோது திடீரென எதிர்பா ராதவிதமாக அருகில் இருந்த அல்மினேட்டி மாதவ ரெட்டி கால்வாயில் கவிழ்ந்தது. 

இதில் டிராக்டரில் இருந்த பெண்கள் அனைவரும் கால்வாய்க்குள் மூழ்கினர். ஆழமான கால்வாய் என்பதால் மூழ்கியவர் களில் பலர் பலியானர். சிலர் நீந்தி தப்பினர். இதையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ள விவசாயிகள், போலீசுக்கு தகவல் கொடுத்து விட்டு மீட்பு பணியில் இறங்கினர். 

இதுவரை 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. 
மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது.


 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close