[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS என்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை

ஸ்டேட் வங்கி வாடிக்கையாளரா நீங்கள்? இதனை படியுங்கள்..!

if-you-are-an-sbi-customer-do-these-two-things-before-march-31

ஸ்டேட் வங்கியுடன் இணைந்த துணை வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தங்களது புதிய செக் புக்கிற்கு விண்ணப்பிக்க நாளையுடன் காலக்கெடு முடிவடைகிறது.

பாரத ஸ்டேட் வங்கியுடன், ஸ்டேட் பேங்க் ஆப் ஜெய்ப்பூர், ஸ்டேட் பேங்க் ஆப் ஹைதராபாத், ஸ்டேட் பேங்க் ஆப் மைசூரு, ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா, ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் ஆகிய ஐந்து துணை வங்கிகளும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி இணைக்கப்பட்டன. அதேபோல், 2013-ம்ஆண்டு தொடங்கப்பட்ட பாரதீய மகிளா வங்கியும் ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட்டது. தொடங்கி 3 ஆண்டுகள் 3 மாதங்களிலே பாரதீய மகிளா வங்கி இணைக்கப்பட்டது.

இதனையடுத்து, இணைக்கப்பட்ட 5 துணை வங்கிகள் மற்றும் பாரதீய மகிளா வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்களது வங்கியில் புதிய செக் புக்கினை விண்ணப்பித்து வாங்கிக் கொள்ளுமாறு ஸ்டேங் வங்கி வலியுறுத்தியது. இதற்காக முதலில் 2017, செப்டம்பர் 30ம் தேதி வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் அது 2017, டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இறுதியாக, ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கிகளின் வாடிக்கையாளர்கள் புதிய செக் புக்கிற்கு விண்ணப்பிக்க மார்ச் 31 ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. மார்ச் 31-க்குள் புதிய செக் புக்கிற்கு விண்ணப்பிக்கவில்லை என்றால், பழைய செக் புக் அனைத்தும் செல்லாது என்று ஸ்டேட் வங்கி கூறியது. உடனடியாக விண்ணப்பித்து சிரமங்களை தவிர்க்கவும் என்று ஸ்டேட் வங்கி அறிவுறுத்தியது.

இந்நிலையில், புதிய செக்புக் விண்ணப்பிக்க நாளையுடன் காலக்கெடு முடிவடைகிறது. எஸ்பிஐ வங்கி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தத் தகலவை தெரிவித்துள்ளது. புதிய செக்புக் புதிய ஐ.எஃப்.எஸ்.சி எண்ணுடன் வழங்கப்படும். 

மற்றொரு முக்கிய அறிவிப்பு, விழாக் காலச் சலுகையாக 2018 மார்ச் 31 வரை செயல்பாட்டுக் கட்டணம் இல்லாமல் வீட்டுக் கடனை எஸ்பிஐ வங்கி அளிக்கிறது. அதற்கும் நாளையுடன் காலக்கெடு முடிவடைகிறது.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close