[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் லஞ்ச புகாரில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளரின் வங்கி லாக்கரில் ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு
  • BREAKING-NEWS ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை - அப்போலோ தரப்
  • BREAKING-NEWS உலகில் 5 விநாடிக்கு ஒரு குழந்தை மரணம்- ஐநா பகீர் தகவல்
  • BREAKING-NEWS கட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு

மீண்டு வந்தார், 9 புல்லட்டுகள் பாய்ந்த சிஆர்பிஎப் கமாண்டன்ட்!

crpf-commandant-chetan-cheetah-back-in-action

மெடிக்கல் மிராக்கிள் என்பார்களே, அதற்கு சரியான உதாரணம் இதுவாகத்தான் இருக்க முடியும்!

கடந்த வருடம் பிப்ரவரி 14-ம் தேதி நடந்தது அந்த சம்பவம். ஜம்மு காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் உள்ள கஜின் பகுதியில் ஊடுருவியிருந்தார்கள் தீவிரவாதிகள். தகவல் தெரிந்து வேட்டையாடப் புறப்பட்டது, ராணுவம். கூடவே மத்திய ரிசர்வ் போலீஸ் படையும். தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் துப்பாக்கிச் சண்டை. சினிமாவில் பார்ப்பதைவிட கடும் மோதல். புல்லட்டுகள் சீறி பாய்ந்தன. 

கடைசியில் ஒரு தீவிரவாதி பலியானான். ராணுவ தரப்பில் மூன்று வீரர்கள், உயிர் தியாகம் செய்திருந்தனர். மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 45 பட்டாலியனின் கமாண்டன்ட் சேதன் குமார் சீட்டா (Chetan Kumar Cheetah)வுக்கு பலத்த காயம். உடனடியாக ஸ்ரீநகர் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சேதன் குமாரை சோதித்தால், உடல் முழுவதும் 9 புல்லட்டுகள். அதில் ஒன்று மண்டையை சிதைக்க, மற்றொன்று வலது கண்ணைப் பதம் பார்க்க என ஏகப்பட்ட பாதிப்பு. 

அவ்வளவு ரத்த சிதறலுக்கு இடையே அவர் பிழைப்பது கஷ்டம் என்று முடிவு செய்துவிட்டார்கள் அனைவரும். அதே போல அவரும் கோமா ஸ்டேஜுக்கு சென்றுவிட்டார். பிறகு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட அவருக்கு மண்டை ஓட்டை அகற்றி சீரியஸ் ஆபரேஷன். மேலும் ஒரு ஆபரேஷன். கடும் போராட்டத்துக்குப் பிறகு ஏப்ரலில் மீண்டார் சேதன்.

‘தினமும் வீட்டுக்கு ஃபோன் பண்ணிடுவார். அன்னைக்கு ஃபோன் பண்ணலை. எனக்கு சந்தேகம். பதட்டத்தோடு காஷ்மீர் கன்ட்ரோல் ரூமுக்கு ஃபோன் பண்ணினேன். அப்பதான் அவர் காயம்னு தெரிய வந்தது. எனக்கு உயிர் போயிடுச்சு’ என்கிற அவர் மனைவி உமா சிங், ‘அவர் நம்பிக்கையான மனிதர். உடல்ல ஒன்பது குண்டு துளைச்சும் அவர் மீண்டு வந்திருக்கார்னா, அவரோட வில்பவர்தான் காரணம்’ என்கிறார். இவர்கள் டெல்லியில் வசிக்கிறார்கள். 

இப்போது மீண்டும் பணியில் சேர்ந்திருக்கிறார் சேதன். துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு காஷ்மீரில் தீவிரவாதிகளை குறி வைத்த சேதன், இப்போது டெல்லி தலைமை அலுவலகத்தில் இணைந்திருக்கிறார். 

‘என் குடும்பம், மனைவி எல்லாருக்குமே கவலை. அதையும் தாண்டி நான் மீண்டும் யூனிபார்ம் போடுவேன்னு நினைச்சேன். அது நடந்திருக்கு. இது எனக்கு இரண்டாவது வாழ்க்கை’ என்கிற சேதன், இளைஞர்கள் நாட்டுக்காக உழைக்க வரணும் என்கிறார்!

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close